தம்புள்ளை பள்ளிவாசல் தொடர்பில் அவசரப்பட வேண்டாம் - ஹக்கீமிடம் கூறிய மஹிந்த
TM
தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை தொடர்பாக அவசரப்பட்டு முடிவுகள் எதனையும் எடுக்கவேண்டாம் என தெரிவித்துள்ள ஜனாதிபதி அப்பிரச்சினைக்கு சிறந்த தீர்வொன்று வெகு விரைவில் பெற்றுக்கொடுப்பதாகவும் வாக்களித்துள்ளார் எனவும் அமைச்சர் ஹீக்கீம் கூறியுள்ளார்.
அநுராதபுரம் சீ.ரீ.சீ.மண்டபத்தில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்களுடனான கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அரசாங்கத்துக்கு இருந்த மக்கள் ஆதரவில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது பொதுமக்களின் கருத்துக்கள் மூலம் தெரிய வருவதாக முஸ்லின் காங்கிரசின் தலைவரும் நீதி அமைச்சருமான றவூப் ஹக்கீம் கூறியுள்ளார். அமைச்சர் ஹக்கீம் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் கூறியதாவது,
அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் இரண்டாம் நிலை பெரிய கட்சி நாமே. எம்மை அரசாங்கத்திலிருந்து பிரித்து வேடிக்கைபார்க்க சிலர் முற்படுகின்றனர். எனினும் கண்டதற்கெல்லாம் காவடி ஆடும் கட்சியைச் சேர்ந்தவர்கள் அல்ல.
எம்முடனிருந்து பிரிந்து சென்ற சிலர் முஸ்லிம் காங்கிரஸை வீழ்த்த பல்வேறு சதிகளைச் செய்கின்றனர். சில பிரதேச எல்லைகளுக்கே போகமுடியாத நிலை ஒரு காலத்தில் எமக்கு இருந்தது. இவ்வாறான பல சவால்களுக்கும் எதிர்ப்புக்களுக்கும் மத்தியிலேயே நாம் இந்த அளவு முன்னேற்றம் கண்டுள்ளோம். முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக நாம் 50 இற்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை நாம் உருவாக்கியுள்ளோம்.
வடமத்திய மாகாண சபைத்தேர்தலுக்கு நாம் தயாராக வேண்டியுள்ளது. இதில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்புரிமையை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். நாம் கலந்துரையாடல்களை நடத்தி உறுப்பினர்களையும் மட்சி கிளைகளையும் பலப்படுத்திக்கொள்ள வேண்டும்' என்றார்.

முஸ்லிம் காங்கிரசை வீழ்த்த வெளியாட்கள் ஏன்?உங்களுக்குள்ளேயே ஒருவருக்கொருவர் குழி பறித்துக் கொண்டு
ReplyDeleteமாறி மாறி அறிக்கை விட்டுக் கொண்டுதானே இருக்கிறீர்கள்.உலகம் அழியும் மட்டும் அரசியல் வியாபாரிகளைத்
திருத்தவே முடியாது.பெரிய கட்சி,சிறிய கட்சி முக்கியமில்லை.யாரு சாதிக்கிறார்கள் என்றுதான் மக்கள் பார்க்கிறார்கள்.இனிமேலாவது தற்பெருமை கொள்ளாமல், பம்மாத்து அரசியல் செய்யாமல் வாக்களித்த மக்களுக்கு
உண்மையாக இருக்கப் பாருங்கள்.
Meraan
தம்புள்ளை மஸ்ஜித் விவகாரம் முடிவுக்கு வந்து விட்டது, இனிமேல் அது பற்றி பேச தேவையில்லை என்று அண்மையில் புத்திசாலித்தனமாக அறிக்கை விட்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம் இப்போது மறுபடியும் வேதாளம் முருங்கைமரம் ஏறிய கதை மாதிரி மீண்டும் ஒரு அறிக்கை விட்டு இருக்கிறார்.
ReplyDeleteஅவரும் வாக்களித்துக் கொண்டே இருப்பார் இவரும் கைப்பொம்மை மாதிரி தலையாட்டிக் கொண்டே இருப்பார் இதையெல்லாம் முஸ்லிம் சமுகம் கேட்டுக் கொன்டே இருக்க வேன்டுமாம்.
அடுத்த தேர்தல் வருது எல்லோரும் ரெடியாகுங்கப்பா...மஸ்ஜித் எக்கேடு கெட்டுப்போனால் எமக்கென்ன நமக்கு சீட்டு தானே முக்கியம்.