வழிகாட்ட வேண்டிய மதகுருமார்கள் தடுமாறுவதா..?
(இன்று வெள்ளிக்கிழமை, மே 18 ஆம் திகதி வெளியாகியுள்ள நவமணி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தை இங்கு தருகிறோம்)
இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 3 வருடங்கள் நிறைவடைந்துவிட்டன. இந்த காலப்பகுதியில் இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் வெற்றி பெற்றனவா என்ற கேள்விகள் ஒருபுறம் இருக்க மறுபுறம் முஸ்லிம் சமூகம் மீதான தவறான புரிதல்கள் மேலோங்கி காணப்படுவதை நாம் அவதானிக்க முடிவதுடன் மத குருமார் இதில் முன்னணி வகிப்பதையும் நோக்கமுடிகிறது.
தம்புள்ள பள்ளிவாசல் அகற்றப்பட வேண்டுமென வலியுறுத்தி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்றமை, தம்புள்ள பள்ளிவாசலுக்கு தேசம் விளைவித்தமை உள்ளிட்ட அருவருக்கத்தக்க செயற்பாடுகளை இந்த பௌத்த தேரர்களே மேற்கொண்டிருந்தனர். தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் தொடர்ந்து இழுபறியில் உள்ள நிலையில் மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோஸப் வடக்கு முஸ்லிம்கள் தொடர்பில் வெளிப்படுத்தியுள்ள கூற்றுக்களும் முஸ்லிம்கள் தொடர்பில் பௌத்த, கிறிஸ்த்தவ மதகுருமார் கொண்டுள்ள நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்துவதாக அமைகிறது.
அந்தவகையில் மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோஸப் முஸ்லிம்களுக்கு நிலங்களை விற்பனை செய்ய வேண்டாம் என மன்னாரில் நடைபெற்ற பொது நிகழ்வொன்றில் தெரிவித்த கருத்துக்களும், இதுதொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு முஸ்லிம்கள் நில ஆக்கிரமிப்பு செய்து வருவதாக ஆயர் எழுதிய கடிதமும் தற்போது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இதுதொடர்பில் உரையாற்றியுள்ள அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தம்புள்ளைப் பிக்குவைப் போலவே மன்னார் ஆயரும் முஸ்லிம்களுக்கு எதிராக மதவாதப் போக்கில் செயற்பட்டு வருகின்றார். முஸ்லிம்களுக்கு நிலங்களை விற்பனை செய்ய வேண்டாம் என்றும் முஸ்லிம்கள் நில ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும் மன்னார் ஆயர் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருக்கின்றார். அவர் முஸ்லிம்களுக்கு எதிராக மத வாதத்தைப் பரப்பி பிளவுகளை ஏற்படுத்த விளைகின்றார்.
முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் எமது சொந்த இடங்களில் நாம் மீள்குடியேற வேண்டும் என்று தான் கேட்கிறோம். அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடம் கொடுக்க மறுக்கின்றது. அதேபோன்று மன்னார் ஆயரும் செயற்பட்டு வருகின்றார். நாம் யாருடைய நிலங்களையும் ஆக்கிரமிக்கவில்லை. புலிகளால் விரட்டப்பட்ட ஒரு இலட்சம் முஸ்லிம்கள் இன்று புத்தளத்தில் இருக்கின்றனர். இவர்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். ஆனால் அது அதனைச் செய்யவில்லை.
இடம்பெயர்ந்த ஒரு இலட்சம் முஸ்லிம்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றியே தீருவேன். எனது உயிரைக் கொடுத்தேனும் அதனைச் செய்வேன். தமிழர் போராட்டத்தை நாம் எதிர்க்கவில்லை. அவர்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும். அதேபோல் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு எட்டப்பட வேண்டும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் எமது சொந்த இடங்களில் நாம் மீள்குடியேற வேண்டும் என்று தான் கேட்கிறோம். அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடம் கொடுக்க மறுக்கின்றது. அதேபோன்று மன்னார் ஆயரும் செயற்பட்டு வருகின்றார். நாம் யாருடைய நிலங்களையும் ஆக்கிரமிக்கவில்லை. புலிகளால் விரட்டப்பட்ட ஒரு இலட்சம் முஸ்லிம்கள் இன்று புத்தளத்தில் இருக்கின்றனர். இவர்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். ஆனால் அது அதனைச் செய்யவில்லை.
இடம்பெயர்ந்த ஒரு இலட்சம் முஸ்லிம்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றியே தீருவேன். எனது உயிரைக் கொடுத்தேனும் அதனைச் செய்வேன். தமிழர் போராட்டத்தை நாம் எதிர்க்கவில்லை. அவர்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும். அதேபோல் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு எட்டப்பட வேண்டும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் அமைச்சர் ஒருவரால் கிறிஸ்த்தவ ஆயர் ஒருவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள இக்குற்றச்சாட்டு இதுவே முதன்முறையாக இருக்கலாம். அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடைய இக்குற்றச்சாட்டு தொடர்பில் இதுவரை மன்னார் ஆயரிடமிருந்து எத்தகைய உத்தியோகபூர்வ பதில்களும் வெளியாகவில்லை. இருந்தபோதும் வன்னி மாவட்டத்தை சேர்ந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் அமைச்சரின் கருத்துக்களை நிராகரித்திருந்தார்.
அதேவேளை வடக்கு முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களிடமதிருந்து மன்னார் ஆயர் முஸ்லிம்கள் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்களுக்கு பரவலாக எதிர்ப்புக்களும், கண்டனங்களும் வெளியாகியுள்ளன.
மன்னார் விடத்தல்தீவு ,பெரியமடு ,காக்கயன்குளம் ,அடம்பன் போன்ற சுற்றியுள்ள முஸ்லிம் கிராமங்களுக்கு மத்தியில் சன்னார் என்ற இடம் அமைந்துள்ளது . இந்த சன்னார் என்ற பெயர் அங்கு உள்ள சன்னார் குளத்தினால் ஏற்பட்டதாகும் சன்னாரிலே குளத்தை சூழவுள்ள வயல்/ விவசாய நிலங்கள் அனைத்துமே விடத்தல்தீவு முஸ்லிம்களுக்கு சொந்தமானதாகும்.
முன்னர் அங்கு எந்த ஒரு கிருஸ்தவ குடும்பமும் இருக்கவில்லை. ஆனால் யுத்தத்திற்கு பின்னர் எதேர்சதிகாரமாக இந்து மக்களை காணி வீடு கொடுத்து கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றி சன்னார் பிரதேசத்தில் உள்ள அரச காணிகளில் குடியேற்றியுள்ளதுடன், அவ்வாறு சட்டவிரோதமாக குடியேற்றப்பட்டுள்ளவர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட காணி உறுதிகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் முஸ்லிம்கள் தரப்பில் குற்றம் சுமத்தப்படுகிறது.
இவ்வாறு அந்த பிரதேசத்துடன் சம்பந்தமே இல்லாத மக்களுக்கு முஸ்லிம் மக்களின் பிரதேசத்திற்கு மத்தியில் குடியேற்றுவதற்கும் காணி உறுதி வழங்குவதற்கும் என்ன அதிகாரம் இருக்கின்றது..?அதுமட்டுமல்லாமல் ஆயரின் அண்மைய கூற்றின் படி விடத்தல்தீவு முஸ்லிம்கள் காணிகளை ஆக்கிரமிக்கின்றனராம். அத்துடன் விடத்தல்தீவு கிறிஸ்தவர்களுக்கு காணி இல்லையாம். அப்படியானால் மன்னார் நகரத்துக்கு அண்மையில் அமைத்துள்ள தோட்டவெளி என்ற இடத்திலே வீடு உட்பட அனைத்து வசதிகளுடனும் விடத்தல்தீவு கிறிஸ்தவர்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள் இதனை எங்கு சேர்ப்பது எனவும் முஸ்லிம்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்ட்டுள்ளது.
விடத்தல்தீவில் போதியளவு காணி இல்லாத காரணத்தால் விடத்தல்தீவு தமிழ், முஸ்லிம் மக்களின் இணக்கப்பாட்டுடன்,பிரதேச செயலாளர் ஊடாக முறையாக விண்ணப்பித்து, பிரதேச செயலாளர் ,அரசாங்க அதிபர் ,வடமாகாண ஆளுனர் ,மற்றும் காணி அமைச்சர் ஆகியோரின் அனுமதியுடன் ஆயரால் மதம் மாற்றுவதற்காக வழங்கப்பட்ட காணிகள் போக மீதமுள்ள காணிகளில் விடத்தல்தீவு தமிழ், முஸ்லிம் மக்களுக்கு சமஅளவில் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்பட்ட காணிகளில்தான் முஸ்லிம்கள் குடியேறுகின்றனர் எனவும் முஸ்லிம்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
1980 க்கு முன்னரே அரசினால் இக்காணிகள் முஸ்லிம் மக்களுக்கு கொடுக்கப்பட்டவைதான் அதற்கான ஆதாரங்கள் சிலரிடம் (பேர்மிட்) உள்ளது பெரும்பாலானவர்களின் காணி உறுதிகள் புலிகளால் பறிக்கப்பட்டு உடுத்திய உடையுடன்தான் பலவந்தமாக இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டார்கள் என்ற விடயம் மன்னர் ஆயர் இராயப்பு ஜோஸப்புக்கு தெரியும் எனவும் மன்னார் முஸ்லிம்கள் வாதிடுகின்றனர்.
மன்னார் முஸ்லிம்களின் இந்த வாதத்தில் நியாயம் இருக்கிறது என்பதற்கு அப்பால் முஸ்லிம்களுக்கு காணி வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் எந்தவொரு மதகுருவுக்கும் வழங்கப்படவில்லை என்பதே எமது வாதமாகும்.
சட்டத்தையும், நீதியையும் நிலைநாட்டுவது அரசாங்கத்தின் கடமையாகும். எங்காவது தவறுகள், சட்டத்திற்கு விரோதமான செயற்பாடுகள் நடைபெறுமாயின் அதுவிடயத்தில் கவனமெடுக்க அரசாங்கம் மற்றும் அதிகாரிகள் உள்ளனர். எவருக்காவது அநீதி இழைக்கப்படுமாயின் அவர்கள் சட்டத்தை நாடலாம். இதைவிடுத்து உயர்வான பதவிகளில் இருக்கும் மன்னார் ஆயர் போன்றவர்கள் சட்டத்தை கையிலெடுப்பதை ஆதரிக்கவோ அல்லது நியாயப்படுத்தவோ முடியாது.
வடகிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் இந்து, முஸ்லிம், கிறிஸ்த்தவ உறவு என்பது பிரதானமானது. எந்தவொரு சமூகமும் தனித்துச்செற்பட முடியாது. நல்லிணக்கம் இன்றேல் சமூககங்களுக்கிடையிலான சகவாழ்வும் சாத்தியமற்று போய்விடும் அபாயமிருப்பதை சகலரும் உணர்ந்துகொள்ளவேண்டும்..!!

Post a Comment