Header Ads



இலங்கை குடியரசு தினம் இன்று

இலங்கை குடியரசு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. பிரித்தானிய காலணித்துவ ஆட்சி முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, 1972 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி குடியரசு தினம் பிரகடனம் செய்யப்பட்டது.

பிரித்தானிய மஹாராணியின் ஆட்சியில் இருந்து இலங்கை பூரண சுதந்திரமடைந்த தினமாக குடியரசு தினம் அமைவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை முழுமையான சுதந்திரம் பெற்ற நாடாக பிரகடனப்படுத்தப்பட்டதை நினைவு கூறும் வகையிலேயே இந்தத் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

1948 ஆம் ஆண்டு டொனமூர் யாப்பு முறையின் கீழ், இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட போதிலும், 1972 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட புதிய யாப்பின் பிரகாரமே நாட்டிற்கு முழுமையான சுதந்திரம் கிடைத்தது.
இலங்கையின் குடியரசு தினம் பிரகடனம் செய்யப்பட்டதை
யடுத்து நாட்டின் இறைமையை அடிப்படையாகக் கொண்டு மக்கள் தமது பிரதிநிதிகள் ஊடாக புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்கியது.

2 comments:

  1. 1972ம் ஆண்டு தமிழர் விடுதலை கூட்டணி குடியரசுத் தினத்தை பகிஸ்கரிக்க சொல்லியது ஞாபகத்தில் வருகிறது .ஆனால் அவர்கள் புத்தம் புதிய ஜீப்பில் உதய சூரியன் கொடியை ஏற்றிக் கொண்டு வட கிழக்கில் ஷோ காட்டித் திரிந்தார்கள் .தங்கள் குடும்பத்தவர்களை கொழும்பில் குடியேற்றி சிங்களம் படிக்க வைத்தார்கள்.அதன் தொடர்ச்சியை முள்ளிவைகாளில் முடித்து வைத்தும் அடங்காமல்
    தொடர்ந்து வெற்று அறிக்கைகள் விட்டுக் கொண்டு இன்னும் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்
    Meraan

    ReplyDelete
  2. இலங்கை சுதந்திரம் பெற்று 1972 வரை இருந்த யாப்பு டொனமூர் இல்லை சோல்பரி யாப்பு
    என மாற்றவும் பதி வில் பிழையுள்ளது

    ReplyDelete

Powered by Blogger.