Header Ads



எகிப்தில் நாளை ஜனாதிபதி தேர்தல் - இஹ்வானுல் முஸ்லிமின் வேட்பாளர் வெற்றி பெறுவாரா..?



எகிப்து அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவுற்றது. ஹுஸ்னி முபாரக்கின் வீழ்ச்சிக்கு பிறகு நடைபெறவிருக்கும் முதல் அதிபர் தேர்தல் நாளை 23 ஆம் திகதி  மற்றும் நாளை மறுதினம் நடைபெறும்.

தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள ஒழுக்க விதிமுறைகள் படி வாக்காளர்களை கவருவதற்கான எவ்வகையான செயல்களிலும் வேட்பாளர்கள் ஈடுபடக் கூடாது. வேட்பாளர்களின் விளம்பங்களை வெளியிடுவது மற்றும் அவர்களிடம் பேட்டிகள் எடுப்பதற்கு ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதன் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் நடைபெறும் தேர்தலில் எவருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லையெனில் முதல் 2 இடங்களை பிடிக்கும் வேட்பாளர்கள் இடையே அடுத்த மாதம் 16, 17 தேதிகளில் மீண்டும் தேர்தல் நடைபெறும்.

இஃவானுல் முஸ்லிமீன் வேட்பாளர் டாக்டர் முஹம்மது முர்ஸி, முன்னாள் இஃவான் உறுப்பினர் அப்துல் முனீம் அப்துல் ஃபத்தாஹ், அரப் லீக் முன்னாள் பொதுச்செயலாளர் அம்ர் மூஸா, முபாரக் ஆட்சியின் இறுதி பிரதமர் அஹ்மத் ஷஃபீக் ஆகியோர் அதிபர் தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.

வெளிநாடுகளில் வாழும் எகிப்தியர்கள் அளித்த வாக்குகளில் இஸ்லாமியவாதிகளுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.

No comments

Powered by Blogger.