Header Ads



நெருக்கடியான நேரங்களில் இணைந்து செயற்பட முஸ்லிம் அமைப்புக்கள் முக்கிய தீர்மானம்

இலங்கை முஸ்லிம் உம்மா நெருக்கடிகளை எதிர்கொள்ளும் வேளைகளில் சகல வேறுபாடுகளையும் மறந்து ஒன்றுபட்டு செயற்படுவது என முஸ்லிம் அமைப்புக்கள் தமக்கிடையே பொது இணக்கப்பாட்டுக்கு வந்திருப்பதாக யாழ் முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகிறது.

அண்மையில் தம்புள்ள பள்ளிவாசல் தாக்குதல் சம்பவத்தை அடுத்து எழுந்துள்ள நிலைமைகளை சமாளிக்கவும், சாத்வீக ரீதியாக போராட்டங்களில் ஒன்றுபட்டு செயற்படவும் முஸ்லிம் அமைப்புக்களிடையே இவ்வாறான கூட்டுச் செயற்பாடு காலத்தின் கட்டாயம் என சிறிலங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் முக்கிய பிரதிநிதி ஒருவர் யாழ் முஸ்லிம் இணையத்திடம் குறிப்பிட்டார்.

இந்த கூட்டு செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் மற்றும் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் ஆசாத் சாலி ஆகியோருடனும் இதுதொடர்பான சந்திப்புகள் நடைபெற்றுள்ளன. அவர்களிடமிருந்து சாதகமான பதில்கள் கிட்டியுள்ளன.

இவ்வாறான செயற்பாட்டுக்கு ஏற்கனவே அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையும், முஸ்லிம் கவுன்ஸிலும், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைமைகளும் தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தன.

தற்போது தேசிய கட்சிகளிலும், தனி நபர்களாகவும், தனி அமைப்புக்களாகவும் செயற்படும் முக்கியஸ்தர்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் நடவடிக்கைக்கு சகல தரபபுகளிடமிருந்தும் ஆதரவு பெருகியிருப்பதாகவும் அறியவருகிறது.

முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் திடீர் சவாலகள், முஸ்லிம் சமூகத்தின் நெருக்கடிமிகு வேளைகளில் இணைந்து செயலாற்றுதல் உள்ளிட்ட முக்கிய சில குறிக்கோளுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்நடடிக்கை மூலம் முஸ்லிம்களின் ஒன்றுபட்ட சக்தியை உலகிற்கும், ஆட்சியாளர்களுக்கும், ஏனைய சமூகங்களுக்கும் வெளிப்படுத்தக்கூடியதாக அமையுமெனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

3 comments:

  1. அல்லாஹ்,இந்த ஒற்றுமையை தொடர்ந்து எல்லா விடயத்திலும் ஹபுலாக்கி வைப்பானாக .
    Meeraan

    ReplyDelete
  2. When people unite Allah will take care of the rest InshaAllah
    Carry on !!

    ReplyDelete
  3. Assalamu Alikum. i think thay can make social network account also.Example facebook grops or twe news alert. becouse now everyone using facebook and blog. we can pass every single news for every country.example dambulla. please try to say JAMIYATUL ULAMA SOCITY OR ANY THIS IS MY HUMBLY REQUEST

    ReplyDelete

Powered by Blogger.