'ஹஜ், உம்ரா செய்யும் சிலரின் நடவடிக்கைகள்' முஸ்லிம் சமூகத்தை விற்காதீர் என உருக்கமான வேண்டுகோள்
நவமணி
புனித ஹஜ், உம்ராவின் மகிமைகளை மதித்து, பாதுகாத்து நடப்போம். இது ஒவ்வொரு முஸ்லிமின் மீதுள்ள முக்கியமான பொறுப்பாகும் என அகில இலங்கை ஜம்மியதுல் உலமா பிரதிப் பொதுச் செயலாளர் மௌலவி தாஸீம்
தெரிவித்தார்.
தெரிவித்தார்.
ஹஜ், உம்ராவுக்குச் சென்று நாடு திரும்புகின்ற ஒரு சிலரின் பிழையான நடத்தைகள் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் வெட்கித் தலை குனிய வைத்துள்ளது. ஒரு சிலரின் இவ்வாறான மோசமான செயல்களால் ஹஜ், உம்ரா கடமைகளுக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் கெடுபிடிகளுக்கும் உள்ளடக்கப்பட்டு வருகின்றன. ஒரு சிலரின் இவ்வாறான பிழையான செயற்பாடுகள் மேலும் தொடரும் பட்சத்தில் நிலைமை மேலும் மோசமடையக் கூடும்.
எனவே, ஹஜ், உம்ராக் கடமைக்காகச் செல்லும் ஒவ்வொரு முறையும் இந்த விடயங்களில் பொறுப்புடனும், தக்வாவுடனும் நடந்து கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் எமது முன்னோர்கள் ஹஜ், உம்ரா கடமைகளை மிகவும் பேணுதலாகவும், தக்வாவுடனும் மேற்கொண்டு வந்தார்கள். இன்றும் கூட அவ்வாறான தக்வாதாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். எனினும் ஒரு சிலரின் பிழையான செயற்பாடுகள் அனைத்து முஸ்லிம்களையும் பாதிப்படையச் செய்துள்ளது.
கடந்த 6ம், 9ம் திகதியும் உம்ரா கடமைக்குச் சென்று வந்த ஒரு சிலர் சட்டவிரோத சிகரெட்டுக்களையும், மேலும் பல சட்டவிரோத பொருட்களையும் எடுத்து வந்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில இவர்களது பொதிகளை சோதனை செய்த போது சட்டவிரோத பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. உம்ரா கடமைக்காகச் செல்வோர் இவ்வாறான பிழையான வழிகளில் ஈடுபடுவது குறித்து சுங்க அதிகாரிகள் விழிப்புடன் செயற்பட்டு வரும் காலப்பகுதியில் புனிதக் கடமைக்காகச் சென்ற முஸ்லிம்கள் இப்பிழையான வழிகளைச் செய்துள்ளமை சகல முஸ்லிம்களையும் வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது.
பெரும்பான்மை ஊடகங்கள் இவ்வாறான செய்திகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றன. இதனால், ஹஜ், உம்ரா கடமைகள் குறித்து பெரும்பான்மை மக்களிடம் இருந்து வருகின்ற மதிப்பும், மரியாதையும் குறைந்து விடக்கூடும். ஹஜ், உம்ராவுக்குச் செல்லும் சகலரும் இவ்வாறானவர்கள் என்ற சந்தேக உணர்வும் கூட அவர்கள் மத்தியில் எழக்கூடும்.
எனவே, இந்த விடயத்தில் ஹஜ், உம்ராவுக்குச் செல்வோர் பொறுப்புடன் செயற்படவேண்டும். ஹஜ், உம்ராவின் கண்ணியத்தையும், நாட்டின் சட்டங்களையும் மதித்துச்செயற்படவேண்டும். ஹஜ், கடமைக்காகச் செல்வோரை விட உம்ராவுக்குச் செல்வோரின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரித்துள்ளது. பல்வேறு நோக்கங்களைக் கொண்டவர்களாகஉம்ராவுக்குச் செல்கின்றனர். தவறுகளும் பெருமளவு இடம்பெற்று வருகின்றன. முகவர் நிலையங்கள் இந்த விடயத்தில் மிக விழிப்புடன் செயற்படவேண்டும். இன்றேல் உம்ரா கடமைக்காகச் செல்வோர் மீதான கெடுபிடிகள் மேலும் அதிகரிக்கக்கூடும்.
எனவே, சகலரும் தமது பொறுப்புக்களை உணர்ந்து தக்வாவுடன் நடந்து கொள்வது காலத்தின் தேவையாகும்.
இதே வேளை ஹஜ், முகவர்கள் மேற்கொண்டு வரும் ஒரு சில நடவடிக்கைகள் பயணிகளைப் பெரிதும் பாதித்துள்ளமை இது தொடர்பாக ஆராயவென நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணைகளிலிருதுதெரியவந்துள்ளது.
ஹஜ் விவகாரங்களுக்கான பொறுப்பாளரும், சிரேஷ்ட அமைச்சருமான, ஏ.எச்.எம். பௌஸி இக்குழுவை நியமித்திருந்தார். இக்குழுவில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் வை.எல்.எம். நவவி, முன்னாள் பணிப்பாளர் ரபீக், அரசாங்க அதிபர் அல்ஷெய்க் முயினுதீன் ஜம்மியத்துல் உலமாவின் பிரதிப் பொதுச்செயலாளர் மௌலவி முபாரக் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
ஹஜ், உம்ரா தொடர்பான தொலைக்காட்சி, வானொலி, விளம்பரங்கள், ஷரிஆவுக்கு மாற்றமான முறையில் மஹ்ர்ரம் இல்லாத நிலையில் பெண்கள் உம்ரா, ஹஜ்ஜூக்கு அழைத்துச் செல்லப்படல், மக்கா மதீனாவசில் உணவு, போக்குவரத்து ஏற்பாடுகள், விளம்பரத்துக்குகேற்ற முறையில் முகவர்கள் செயற்படாமை, வழிகாட்டிகள் இன்றி பயணிகள் அழைத்துச் செல்லப்படுகின்றமை. ஏ.பீ.சி என தரம் பிரித்து அதிக தொகைகளை அறவிடுகின்றமை உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இக்குழு ஆராய்ந்து உரிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. இப்பரிந்துரைகள் விரைவில் அமுலுக்கு வரவுள்ளன.

கடந்த பல ஆண்டுகளாக ஹஜ்ஜுக்கு சென்று திரும்புபவர்களிடம் குறிப்பிடத் தக்க எந்தவிதமான கடும் சுங்க பரிசோதனைகளும் மேற்கொள்ளப் படும் நடைமுறை இருக்கவில்லை.
ReplyDeleteநம்மவர்களே ஹஜ்ஜையும், உம்ராவையும் துஸ்பிரயோகம் செய்துவிட்டு, சுங்கத் திணைக்களத்தை ஹஜ் உம்ரா சென்று வருபவர்கள் மீது கடுமையான பரிசோதனைகளை
மேற்கொள்ள நிர்ப்பந்தித்து விட்டு, ''துவேசம் பிடித்த சிங்கள அரசாங்கம் முஸ்லீம்களுக்கு வேண்டுமென்றே சிரமம் ஏற்படுத்துகின்றது'' என கூக்குரலிடுவதில் என்ன பிரயோசனம்?
.சட்ட விரோதமாக நடப்பவர்களுக்கு அந்த நாட்டு சட்டப்படி பகிரங்கமாக தன்டனை கொடுக்க வேண்டும் அதைப்பார்த்து மற்றவர்கள் திருந்து
ReplyDeleteவார்கள்.அதேபோன்று இந்த கஜ்ஜு கொமிட்டி ? மற்றும் கஜ் ஏஜன்சிகள்
மற்றும் புரோக்கர்மார்கள் இறை அச்சம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். இன்றய நிலமை எப்படி உள்ளது? தெருவுக்கு தெரு புரோக்கர்
10 பேர் சேர்து கொடுத்தால் ஓன்று இலவசம்? இபாதத்தை வியாபாரமாக்
கி விட்டார்கள்.
குட்ட குட்ட கு?கதை மாதிரி உளமா சபை?ஒவ்வொரு வருடமும்
இதை சொல்லி காலத்தை கடத்த வேன்டியதுதான்
நான் எழுத நினைத்த கருத்தை மேலே இருவர் எழுதிவிட்டனர் .ஜசக்கல்லாஹ் ஹைர்.
ReplyDeleteMeeraan
NAAN ELUTHA NINAITTHA KARUTTUKKALAI ELLAAM
ReplyDeleteMEALE ERUSAHOTHARARKAL SUTRI KAANPITTU VITTARGAL
MEALUM ZAM ZAM WATER I KUUDA SILA MOULAVI MAARGAL
SEIYUM GROUP KALIL SRI LANKA WUKKU THOGAIYA
KONDU WANDU SALE PANNUGINTRANAR.............???????????????
nan mel ulla news padithu mihaum kavali utan but unmaiyana kutavali antha haj alla karanam inku vali saihentra sila naparhal thankal sonthankalukku kodukkum padi kuri thankal parsalhalukkul maraithu ivvarana porkalai kodukkum thurathisdavasamana sayal nadanthathu anavai hajihal kavanamaha irukkaum (eye wetness makkah)
ReplyDelete