இங்கிலாந்தில் ஆசிய நாட்டு முஸ்லிம் கர்ப்பிணி தாய் குத்திக்கொலை
ஆசிய நாட்டவரான ஸைபா காத்துன் என்னும் கர்ப்பிணி பெண்மணி ஒருவர் இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
26 வயதுடைய ஸைபா மாற்றுத் திறனாளிகள் பராமரிப்பு மையத்தில் பணியாற்றி வந்தார். ஏழு வயதில் இவருக்கு ஒரு மகன் இருக்கின்றான். இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமந்து நான்கு மாத கர்ப்பிணியாக இருக்கும் ஸைபா தனது மருத்துவர் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக ரோச்டேல் பகுதியில் தனித்து வாழ்ந்து வருகிறார். நேற்று முந்தினம் தனது இல்லத்தில் ஸைபா கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். ஸைபாவின் இல்லத்தில் நேற்றுமுன்தினம் இரவு திடீர் புகைமூட்டம் ஏற்பட்டது. மூச்சுத் மகன் எழுந்த போது, தாயார் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து வீட்டில் இருந்து அலறி கொண்டு வெளியில் ஓடிவந்துள்ளான்.

சிறுவனின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்து ஸைபா கொல்லப்பட்டு கிடப்பதை அறிந்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். காவல்துறை விரைந்து வந்து ஸைபாவின் உடலைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வாடகை வண்டி ஓட்டுநர் ஒருவர் விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.
ஆசிய நாட்டு முஸ்லிம் கர்ப்பிணி பெண் குத்திக் கொல்லப்பட்டது இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல் துறை உடனடியாக இது ஒரு குடும்ப பிரச்சனையா?இன வெறித் தாக்குதலா ?என விசாரித்தரிந்து குறிப்பாக
ReplyDeleteஆசிய நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் .
Meeraan