Header Ads



இஸ்லாம் பிரதான பங்கு வகிக்க வேண்டும் - அமெரிக்காவின் ஆய்வில் தகவல்

IT

நாட்டில் அரசியல் ஸ்திரத் தன்மை இல்லாத,  பொருளாதார நெருக்கடி மிக்க ஒரு சூழலில் ஜனநாயக ரீதியான மாற்றம் குறித்து எகிப்து மக்கள் நம்பிக்கை கொண்டிருப்பதாக அமெரிக்காவின் ”பிவ் ஆய்வு நிலையம்” நடாத்திய கருத்துக் கணிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 19 இலிருந்து ஏப்ரல் 10 வரை நடாத்தப்பட்ட இக்கருத்துக்கணிப்பீட்டில் 1000 வரையான எகிப்தியர்கள் கலந்து கொண்டனர். சமூகத்தளத்தில் இஸ்லாம் பிரதான பங்கினை வகிக்க வேண்டும் எனவும் அல்குர்ஆனே நாட்டின் சட்டங்களை வகுக்க வேண்டும் எனவும் அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை இஹ்வான்கள் பெரும் மக்காளாதரவைப் பெற்றிருப்பதாகவும் 70 வீதமான எகிப்தியர்கள் இஹ்வான்களை நேரிடையாகப் பார்ப்பதாகவும் அக்கருத்துக்கணிப்பீட்டில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. எதுவாக இருந்தாலும் பெரிய சைத்தான் சொன்னால்தான் மக்களுக்கு மண்டையில் ஏறுகிறது.யா! அமெரிக்காவே
    அரபிகளையும் ,முஸ்லீம்களையும்,முழு அண்டசராசரங்களையும் பாதுகாப்பாயாக.
    Meeraan

    ReplyDelete

Powered by Blogger.