முஸ்லிம்கள் பற்றிப்பேச தகுதியற்ற புலி ஆதரவு சக்திகள்..! தம்புள்ள பள்ளிவாசல் குறித்து...!!
சுவைர் மீரான்
வேங்கை சு சே இப்ராஹீம் என்பவர் எழுதி இருந்த (http://www.jaffnamuslim.com/2012/05/blog-post_6515.html ) தம்புள்ளை மஸ்ஜித் விவகாரம் தொடர்பான கட்டுரையில் இடம்பெற்றிருந்த உண்மைக்குப் புறம்பான தகவல்களை சுட்டிக் காட்டும் நோக்குடனும், முஸ்லிம் உரிமைகள் பற்றிப் பேச எந்தத் தகுதியும் இல்லாத புலி சார்பு சக்திகள் தம்புள்ளை விவகாரத்தை வைத்து சுயலாபம் தேட முயல்வதையும் சுட்டிக் காட்டும் நோக்குடனும் ஒரு மறுப்புப் பதிவை, வேங்கை (?) சு சே இப்ராஹீம் அவர்களின் மூல (குருட்டுக்) கட்டுரையை மீள் பிரசுரம் செய்திருந்த யாழ் முஸ்லிம் இணையத் தளத்திற்கு அனுப்பி வைத்தேன் ( http://www.jaffnamuslim.com/2012/05/blog-post_6096.html ) மறுப்பை எழுதும் வேளை, இவரது கட்டுரையில் பிழையான தகவல்கள் என எனக்கு தெரிந்த விடயங்களில் சிலதை மட்டும் குறிப்பிட்டு மறுப்பை வரைந்தேன்.
சில காலங்களுக்கு முன்னர் வேங்கை சு சே இப்ராஹீமின் முகநூலில் பிரபாகரனின் இளைய மகனின் மரணத்தை பெரிது படுத்தி பதிந்திருந்த பதிவிற்கு
( http://www.facebook.com/photo.php?fbid=310393922348628&set=a.146328175421871.37161.100001340672741&type=1 ) தெளிவுபடுத்தல் அல்லது விளக்கம் சொல்லவேண்டிய சந்தர்ப்பம் (http://www.facebook.com/photo.php bid=149780445144339&set=a.149780441811006.28077.100003371525561&type=1&ref=nf ) ஏற்பட்டதால் இவரை எனது முகநூல் நண்பராக இணைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இவரின் முகநூல் ( http://www.facebook.com/vengaiibrahim ) பதிவுகள், மற்றும் தகவல்களில் இருந்து இவர் பற்றிய வெளிப்படையான சில பின்னணித் தகவல்களையும் தெரிந்து கொண்டேன்.
( http://www.facebook.com/photo.php?fbid=310393922348628&set=a.146328175421871.37161.100001340672741&type=1 ) தெளிவுபடுத்தல் அல்லது விளக்கம் சொல்லவேண்டிய சந்தர்ப்பம் (http://www.facebook.com/photo.php bid=149780445144339&set=a.149780441811006.28077.100003371525561&type=1&ref=nf ) ஏற்பட்டதால் இவரை எனது முகநூல் நண்பராக இணைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இவரின் முகநூல் ( http://www.facebook.com/vengaiibrahim ) பதிவுகள், மற்றும் தகவல்களில் இருந்து இவர் பற்றிய வெளிப்படையான சில பின்னணித் தகவல்களையும் தெரிந்து கொண்டேன்.
யாழ் முஸ்லிம் இணையத்தளத்தில் மறுப்பை எழுதும் பொழுது, இவர் யார், இவரின் பின்புலம் என்ன என்பதனையும் சுட்டிக் காட்ட வேண்டிய தேவை இருந்ததால் அது பற்றியும் எழுதினேன். (குறிப்பிட்ட பதிவை அவரின் முகநூலின் குறிப்புகள் பகுதியிலும் பதிந்தேன்)
எனது மறுப்பிற்கு பதில் என்ற பெயரில் பதிவொன்றை வேங்கையார் அவர்கள் தந்து சொந்த வலைத்தளத்தில் பதிந்துள்ளார், அது யாழ் முஸ்லிம் இணையத்தளத்திலும் பதிவாகியுள்ளது. (http://www.jaffnamuslim.com/2012/05/blog-post_10.html) நான் எழுத வேண்டிய சில முக்கியமான விடயங்களை யாழ் முஸ்லிம் இணையத்தளத்தின் குறிப்பு பகுதியில் புத்திசாலி வாசகர்கள் பதிந்து விட்டனர். (அவர்களுக்கு நன்றிகள் உரித்தாகட்டும்) எனினும், அவற்றையும் அடிப்படையாக வைத்து எனது பதிலை இங்கே முன்வைக்கின்றேன்.
எனது மறுப்பிற்கு பதிலளிக்கின்றேன் எனப் புறப்பட்ட வேங்கையார், எனது எந்த கருத்திற்கும் பதில் சொல்லாமல் வேறு எதனையோ எழுதியுள்ளது மட்டுமல்லாமல், எனது மறுப்பில் என்ன எழுதப் பட்டுள்ளது என்பதனை இவரது சொந்த வலைத்தளத்திற்கு வருகை தரும் அப்பாவி வாசகர்கள் பார்த்துவிடக் கூடாது என்பதற்காகவோ என்னவோ, யாழ் முஸ்லிம் இணையத்தளத்தின் இணைய முகவரியைக் கூட பிழையாக குறிப்பிட்டுள்ளார். இது மிகவும் நகைப்பிட்கிடமானது, ஏனெனில் தனக்கென சொந்தமாக வலைத்தளம் ஒன்றை நிர்வகிக்கும் ஒருவருக்கு www.jaffnamuslim.com என்பதனை சரியாக தட்டச்சு செய்ய முடியவில்லை என்பது ஆச்சரியமே!
இவரது ஆரம்பக் கட்டுரையின் தலைப்பே பொய்யுடன்தான் ஆரம்பிக்கின்றது. அதாவது, '' பள்ளிவாசல் இடிப்பும்....'' ஒரு முஸ்லிம் ஒரு பொழுதுமே பொய்யை சொல்லக் கூடாது. ஒருவன் உனக்கு ஒரு தடவை அறைந்தால், நீதிகேட்கும் பொழுது ஒரு தடவை அறைந்தான் என்றுதான் சொல்ல வேண்டும். உதைந்தான் என்றோ கத்தியால் குத்தினான் என்றோ பொய் சொல்லக் கூடாது. தம்புள்ளையில் பள்ளிவாசல் இடிக்கப் படவில்லை, தாக்கப் பட்டது என்பதே உண்மை. பொய்யுடன் ஆரம்பித்த மூலக் கட்டுரை, புலிகளின் திட்டப் படி சிங்களவர்களை முஸ்லீம்கள் மீது பாய வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதை ஊக்குவிக்க துணிகின்றது.
''இலங்கையில் சிறுபான்மை இனமாக வாழும் முஸ்லீம்கள் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டுமென நினைப்பது தவறான செயலாக இருக்க முடியாது'' என்று சொல்லிக் கொண்டே அதற்கு நேர் எதிராக செயல்பட்டால் என்ன நியாயம்? பள்ளிவாசலை சிங்களவர்களில் உள்ள ஒரு மிகச் சிறுபான்மையான இனவாதிகள் தாக்கியதற்கு, அவர்களை மட்டும் கண்டிக்க வேண்டுமே தவிர, ஜனாதிபதியின் உருவப் பொம்மையை எரிப்பதும், தேசியக் கோடியை செருப்பால் அடிப்பதும் தான் எதிர்ப்பை வெளிப்படுத்தும் உரிய வழிமுறையா?
சிங்களவர்களில் 95 % இற்கும் அதிகமானவர்கள் பள்ளிவாசல் தாக்குதலை அனுமதிக்காமல், பள்ளிவாசல் அகற்றப் படத்தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் இருக்கும் நிலையில், குட்டை குழம்பும், மீன் பிடிக்கலாம் என காத்திருந்த புலி சார்பு சக்திகள், தமது ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு, இலங்கை முஸ்லீம்களுக்காக குரல் கொடுக்கின்றோம், போராடுகின்றோம் என்ற பெயரில், இலங்கையில் உள்ள அனைத்து சிங்களவர்கள் மத்தியிலும் முஸ்லிம்கள் குறித்து வெறுப்பை ஏற்படுத்தக் கூடிய நடவடிக்கைகளை மேற்கொண்டு இனக்கலவரத்தை தூண்டி குளிர்காய துடிக்கின்றன.
முஸ்லீம்கள் எதிர்பார்ப்பது இத்தகைய நடவடிக்கைகளை அல்ல. உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்ல உபத்திரம் செய்யாமல் இருங்கள்.
(தூய எண்ணத்துடன் தம்புள்ளை பள்ளிவாசல் மீது அக்கறை கொண்டு, அதற்காக குரல் கொடுத்த, நியாயமான முறையில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்திய அனைத்து இந்திய மற்றும் வெளிநாட்டு முஸ்லிம் சகோதரர்களுக்கும், முஸ்லிமல்லாத நண்பர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கின்றோம்.)
வேங்கயாருக்கு புரிய வேண்டும் என்பதற்காக புலிப் பயங்கரவாதிகளின் வரலாற்றில் இருந்து சொல்வதாக இருந்தால், ராஜீவ் காந்தியின் காங்கிரஸ் அரசு இலங்கைக்கு படைகளை அனுப்பி, அந்தப் படைகள் புலிகளுடன் போரிட்டதை அப்பொழுதைய இந்திய மக்களில் அதிகமானவர்கள் ஆதரித்திருக்கவில்லை. (இது காங்கிரஸ் கட்சிக்கு தேர்தலில் தோல்வியை பெற்றுக் கொடுத்தது.) இதற்கு ஒப்பானதுதான் சிங்கள் மக்களின் பள்ளிவாசல் தாக்குதல் குறித்தான இன்றைய மனநிலை. அதாவது, பள்ளிவாசல் மீதான தாக்குதலை அவர்கள் ஆதரிக்கவில்லை.
புலிகள் ராஜிவ் காந்தியை ஸ்ரீ பெரம்புத்தூரில் படுகொலை செய்த பின்னர் இந்திய மக்களின் மன நிலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டது, புலிகள் இந்தியாவில் தடை செய்யப் பட்டனர், சாதாரண மக்களே புலிகளை காட்டிக் கொடுத்தனர், வெறுத்தனர். ராஜீவ் காந்தி படுகொலை எப்படி இந்திய மக்களின் மனநிலையை மாற்றியதோ, அதே போல ஜனாதிபதியின் உருவப் பொம்மை எரிப்பும், தேசியக் கொடியை செருப்பால் அடிப்பதும், ஜெனிவாவில் புலி சார்பு சக்திகளின் மூலம் பிரச்சினையை பெரிதுபடுத்துவதும், முஸ்லிம்கள் பற்றிய சிங்கள மக்களின் மனநிலையை மற்றக் கூடியன. இவ்வாறான செயல்பாடுகள் முஸ்லீம்களுக்கு எந்த நன்மையையும் பெற்றுக் கொடுக்கப் போவதில்லை. மாறாக சிங்களவர்களை முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடாத்த தூண்டுபவயாகவே அமையும்.
இத்தகைய ஒரு நிலை இலங்கையில் ஏற்படாதா, சிங்களவர்களும், முஸ்லீம்களும் மோதிக்கொள்ள மாட்டார்களா என்று எதிர்பார்த்து புலி சார்பு சக்திகள் ஏங்கித் தவிக்கின்றன.
தம்புள்ளை பள்ளிவாசல் மீதான தாக்குதல் குறித்து இவ்வளவு அக்கறை எடுப்பதாக சொல்லிக்கொள்ளும் நீங்கள் கடந்த காலங்களில் எங்கே இருந்தீர்கள்? புலிகளின் பள்ளிவாசல் படுகொலைகளால் விதவைகளானவர்கள் இன்னும் இருக்கின்றார்கள், உடுத்த உடையோடு விரட்டப் பட்டவர்கள் இன்னும் அகதிகளாக அல்லல் படுகின்றார்கள். முஸ்லீமகளின் எத்தனையோ பாடசாலைகளும், பள்ளிவாசல்களும் இன்னுமும் சிதைவடைந்த நிலையில் உள்ளன. இவற்றுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்த பிரபாகரனின் உருவப் பொம்மையை எரித்து, புலிக்கொடியை செருப்பால் அடிக்க இவர்கள் தயாரா? இதனை சவாலாக விடுகின்றேன்! இங்கே இவர்களின் நயவஞ்சக முகமூடிகள் கிழிவதைக் காணலாம்.
வேங்கையார் மேலும் பதிகின்றார், இன்னொரு பாரிய பொய்யை ''புலிகளை ஒழிக்கிறோம் என்கிற பெயரில் அங்குள்ள தமிழர்களை முழுமையாக கொண்டோலித்த கொடுமை வேறு யாருக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதுதான் எம்மை போன்றவர்களின் விருப்பம்... ''
தமிழர்கள் முழுமையாக கொன்றொழிக்கப் பட்டார்களாம், யாரின் காதில் பூ சுற்றப் பார்க்கின்றார் இவர்? இவருக்கு இலங்கை பற்றி ஒன்றுமே தெரியாது போலும். தெரியாவிட்டால் பேசாமல் இருக்க வேண்டியதுதானே.
அவ்வளவு பெரிய ஆர்வக் கோளாறு இருக்கும் என்றிருந்தால், இலங்கைக்கு வந்து பார்த்துவிட்டு உண்மையை எழுதட்டும். இப்படி பொய்களைச் சொல்லித்தான் புலிகள் கூட மக்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றினார்கள்.
அவ்வளவு பெரிய ஆர்வக் கோளாறு இருக்கும் என்றிருந்தால், இலங்கைக்கு வந்து பார்த்துவிட்டு உண்மையை எழுதட்டும். இப்படி பொய்களைச் சொல்லித்தான் புலிகள் கூட மக்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றினார்கள்.
தமிழர்கள் இலங்கையில் முழுமையாக கொன்றொழிக்கப் பட்டார்களாம், எப்படி இருக்கின்றது இவரின் பொய்யின் ஆழம்! இது போன்ற பாரிய பொய்களை உண்மை என்று நம்பிக்கொண்டுதான் அப்பாவி தமிழர்கள் இலங்கையை வெறுக்கின்றனர், ஆர்ப்பாட்டம் செய்கின்றனர், தீக்குளித்து மடையர்களாக மாண்டு போகின்றனர்.
வேங்கையார் அவரது மூல கட்டுரையில் மிகப் பெரும் ஆதாரங்கள் என்ற பெயரில் எழுதிவிட்டு, கேள்வி கேட்ட பொழுது பதிலாளிக்காமல் விட்ட விடயங்களையும், யாழ் முஸ்லிம் இணையத்தளத்தின் வாசகர்கள் குறிப்பு பகுதியில் பதிந்த விடயங்களில் சிலதையும் மீண்டும் ஞாபகமூட்டி இவரிடம் பதிலை தரும்படி கேட்கின்றேன்.
1 . இம்ரான் படையணி முஸ்லிமின் பெயரால் உருவாக்கப் பட்டது, ஆரம்ப காலப் பயிற்றுவிப்பாளர் கடாபி, லெப்.கோணல் ஜுனைத்தீன் போன்றோர் முஸ்லிம் என்ற உங்கள் பொய்களுக்கு என்ன பதில்?
2 . வேங்கை என்பது உங்களுக்கு பெற்றோர் வைத்த பெயரில் உள்ளதா? புலிகளுக்கு ஆதரவளித்து பெயருக்கு முன்னால் முஸ்லிம்களை கொன்று திரிந்த ஒரு இயக்கத்தின் பெயரை வைக்க முடியுமா? இது வெட்கக் கேடு இல்லையா? இதுதான் நீங்கள் இலங்கை முஸ்லீம்கள் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டுமென நினைப்பதன் வெளிப்பாடா?
3 . புலிகள் முஸ்லீம்களுக்கு செய்த கொடூரங்களுக்கு உங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த உங்கள் கனவு முதலமைச்சர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடாத்தி புலிக்கொடியை செருப்பால் அடித்து, பிரபாகரனின் உருவப் பொம்மையை தீயிலிட தயாரா? செய்து காட்ட முடியுமா?
4 . முஸ்லிம்கள் உள்ளடக்கப் பட்ட ஊர்காவல் படை அமைக்கப் பட்டதால் தான் புலிகளுக்கும், முஸ்லீம்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டது என்பது பொய், புலிகள் காத்தான்குடி பள்ளிவாசலிலும், ஏறாவூரிலும் முஸ்லிம்களை கூட்டாக படுகொலை செய்த பின்னர்தான் ஊர்காவல் படை அமைக்க வேண்டிய தேவையே ஏற்பட்டது. வேங்கையாரே, நீங்கள் வரலாறு என்று எழுதியுள்ளது பச்சைப் பொய்தானே?
5 . அரபு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப் பட்டு, புலிகளின் முஸ்லீம்கள் மீதான தாக்குதல் சம்பவங்களைப் பரப்ப உபயோகிக்கப் பட்ட அன்றைய ஒரு சில முஸ்லிம் அமைச்சர்கள் யார், எப்பொழுது, எந்த அரபு நாட்டுக்கு சென்றார்கள்? இவை ராஜதந்திர விடயங்கள், ஆகவே தெளிவான விவரங்களைத் தரவும். (பொய்யை சொன்னால் நாம் நம்பிவிட வேண்டுமா?)
6 . வேங்கையாரே, நீங்கள் சொல்லுவது போல புலிகள் முஸ்லிம்களை தாக்கியதட்கும், சொந்த மண்ணை விட்டு வெளியேற்றியதட்கும் பகிரங்க மன்னிப்பு கேட்டனர் என்பது உண்மையான நடவடிக்கையாக இருந்தால், மீண்டும் மூதூர் முஸ்லீம்களை கூட்டம் கூட்டமாக ஆண்கள் வேறு, பெண்கள் வேறாக பிரித்தெடுத்து படுகொலை செய்தது எதற்காக?
மீண்டும் ஒரு தடவை மொட்டையாக, பதில் என்ற பெயரில் வேறு எதையாவது எழுதாமல்,முழுமையாக வாசித்துவிட்டு, வேங்கையார் உருப்படியாக பதிலளிப்பாரா என்று பார்ப்போம்.
மீண்டும் ஒரு தடவை மொட்டையாக, பதில் என்ற பெயரில் வேறு எதையாவது எழுதாமல்,முழுமையாக வாசித்துவிட்டு, வேங்கையார் உருப்படியாக பதிலளிப்பாரா என்று பார்ப்போம்.
குறிப்பு : வாசிப்பவர்கள் முழுமையான விடயங்களையும் வாசித்தால், புலி சார்பு சக்திகள் எவ்வாறான பாரிய பொய்களை சொல்லியுள்ளன என்பதனையும், அவை தொடர்பான கேள்விகளுக்கு பதிலைக்க முடியாமல் எப்படி நழுவி உள்ளன போன்ற விடயங்களையும் தெரிந்து உண்மையை உணர்ந்து கொள்வதற்காக வேண்டியே முன்னைய பதிவுகளின் இணைய இணைப்புகள் தரப்பட்டுள்ளன. (வேங்கையார் கூட யாழ் முஸ்லிம் இணையத்தளத்தின் இணைய முகவரியை பிழையாக எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.)

சபாஷ், சரியான நெத்தியடி.
ReplyDeleteஒரு முஸ்லிம் இப்படியெல்லாம் செயல்பட முடியாது என்பதை இப்ராஹீம் புரிந்து கொள்வாரா?
புலிகளை காப்பற்றப் போய் எத்தனை பொய்களைச் சொல்ல வேண்டிய நிலையில் மாட்டியுள்ளார்.
பாவமப்பா வேங்கயர்ர்ர் இத்தோடு விட்டுவிடுங்கள்
ReplyDeleteயாழ்குருவி
சகோதரர் சுவைர் மீரான் அவர்களுக்கு,
ReplyDeleteசகோதரர் இப்ராஹீம் அவர்கள் எழுதிய ஆக்கமும், தங்களது ஆக்கத்திற்கு எழுதிய பதிலும், உண்மையற்றது என்பது அனைவரும் அறிந்தது.
சகோதரர் இப்ராஹீம் அவர்கள் மட்டுமல்ல, பெரும்பாலும் தமிழக முஸ்லிம்கள் உண்மையை அறியாமல் இருப்பது வேதனை.
இஸ்லாம் காட்டும் பண்பு, நாகரிகம், சகோதரத்துவம் மூலம், நாம் சகோதரர் இப்ராஹீம் அவர்களைத் திருத்துவோம்.
இலங்கை முஸ்லிம்களுக்கு உதவுகின்றோம், இலங்கை முஸ்லீம்களுக்காக குரல் கொடுக்கின்றோம் என்று புறப்படும் தமிழ்நாட்டு முஸ்லிம்கள், தமது நிலைப்பாடுகளை இலங்கை முஸ்லீம்களின் நிலைப்பாட்டிலிருந்து
ReplyDeleteஉருவாக்க வேண்டுமே தவிர, புலி ஆதரவாளர்களின் நிலைப்பாட்டில் இருந்து உருவாக்கிக் கொண்டு, புலி ஆதரவாளர்களின் செயல் திட்டத்தை செயல் படுத்திக் கொண்டு, //நாம் இலங்கை முஸ்லிம்களின் நலனுக்காக செயல்படுகின்றோம்// என்று சொல்லக் கூடாது.
இலங்கையில் முஸ்லீம்களுக்கு உள்ள பிரச்சினைகள் குறித்த நிலைப்பாட்டினை, கள நிலவரத்தை நன்கு உணர்ந்த இலங்கை முஸ்லீம்களே எடுக்க வேண்டுமே தவிர, புலிகள் எடுக்கும் செயல்திட்டத்தை தமிழக முஸ்லீம்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது.