Header Ads



கொழும்பில் ''கபன்'' வங்கி - செவ்வாய்கிழமை திறக்கப்படுகிறது

எப். எம். பைரூஸ்

ஜனாஸாக்களுக்கான கபன் துணிகளை கிரமமாக வழங்குவதற்காக கபன் வங்கி ஒன்று கொழும்பில் அமைக்கப்படும். கொழும்பு ஜனாஸா நலன்புரிச் சங்கம் இந்த கபன் வங்கியை அமைப்பதாக சங்கத் தலைவர் எம். அஷ்ரப் ஹுஸைன் தெரிவித்தார்.

பிரதி உள்நாட்டு வர்த்தக பாவனையாளர் விவகார அமைச்சர் பiர் ஷேகு தாவூத் இந்த கபன் துணிகளைப் பெறுவதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளார்.

நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பாராளுமன்ற விவகார இணைப்புச் செயலாளரும், வை. எம். எம். ஏ. தேசிய அசெம்பிளியின் ஆளுநருமான ஹஸன் அல் பாஸி ஷரீப் பிரதி அமைச்சரோடு இப்பணியினை முடுக்கி விட்டுள்ளார்.

கொழும்பு ரோஸ்மீட் பிளேசில் இது தொடர்பான ஆரம்ப நிகழ்வு பிரதி அமைச்சரின் பங்குபற்றுதலோடு செவ்வாயன்று 15 ஆம் திகதி மாலை நடைபெறும். நாட்டின் சகல பகுதிகளிலும் கபன் துணிகளை சீராக வழங்குவதற்கு இந்த புதிய வங்கி செயற்பட இருப்பதாக தலைவர் எம். அஷ்ரப் ஹுஸைன் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.