குடும்பம் என்ற அலகு சிதைந்தால் சமூகம் என்ற அலகும் சிதைந்து விடும் - அஷ்ஷேக் ஹூஸ்னி
ஜே.எம்.ஹபீஸ்
உள்ளத்தில் இருப்பவரை நினைத்துக் கொண்டு வாழ முயற்சித்தால் இல்லத்தில் இருப்பவரால் பிரச்சினைகள் ஏற்படுவதுடன், திருமணத்திற்கு முந்திய செல்போன் காதல் குடும்பம் என்ற அலகை சிதைத்து விடுவதாக அஷ்ஷேக் ஹூஸ்னி முபாறக் (இஸ்லாஹி) தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை, 13 ஆம் திகதி மடவளை பஸார் ஜமாஅத்தே இஸ்லாமி ஒழுங்கு செய்த 'கண்குளிர்ச்சிதரும் குடும்பம் மனிதம் வாழும் தேசம்' என்ற தலைப்பிலான மத்திய பிராந்திய இஸ்லாமிய 'இஜிதிமா' மாநாட்டில் வைத்து அவர் இதனைத் தெரிவித்தார். மதீனா மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற இந் நிகழ்வில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
மனிதர்கள் தமது சகல பிரச்சினைகளையும் கீழே இறக்கிவைத்து விட்டு மன ஆருதல் அடையும் இடம் தான் குடும்பம் என்ற கட்டமைப்பு. மனிதன் தினம் தினம் பிரச்சிகைளையும் விரக்கி நிலையையும் சந்திக்கின்றான்.
குடும்பம் என்ற கோட்டையில் நிம்மதியாக இருக்கவேண்டும். அப்படி நிம்மதியைப் பெற அக்குடும்பம் கண்குளிர்ச்சி தரும் குடும்பமாக இருக்கவேண்டும். அங்கே கண்குளிர்ச்சி இல்லையா அக்கோட்டை சிதைந்து விடும்.
இதனாற்தான் கண்குளிர்ச்சி தரவேண்டிய குடும்பங்கள் பிரச்சினைகளைச் சுமந்து கொண்டு நிம்மதி இழந்து வாழ்கின்றன. இதை 'குடும்பம் என்பது ஒரு இலக்கை அடிப்படையாகக் கொண்ட நிறுவனம்' என்ற கருத்துப்பட திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.
'நம்பிக்கை கொண்டோரே உங்களையும் உங்கள் குடும்மபத்தையும் நரக நெருப்பபை விட்டும் பாதுகாப்புத் தேடிக் கொள்ளளுங்கள்' என்று திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது. குடும்பம் என்ற கோட்டை அன்பு, பாசம், அரவணைப்பு, பரஸ்பரம் புரிந்துணர்வு போன்ற பல்வேறு அத்திவாரங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. எப்போது இவை சிதைவடைகின்றதோ அப்போது குடும்மப் என்ற கோட்டையும் சரிய ஆரம்பித்து விடும்.
அத்தோடு 'உங்களுக்குள் இருந்தே உங்கள் மனைவியரைத் தெரிவு செய்தோம'; என்று குர்ஆன் குறிப்பிடுகிறது. ஆத்தோடு அழகு பற்றிய திருக்குர்ஆன் வசனத்தில் 'ஸகீனத்' என்று இரண்டு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ஒன்று பள்ளி வாயலிலும் மற்றது குடும்பம் என்ற கட்டமைப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே சகீனத் என்ற அழகு பாழ்படுத்தப்படக் கூடாது. திருமண பந்தத்தில் இணையும் ஒரு ஆண் கொடுக்கும் வாக்குறுதிதான் 'கபில்து நிகாஹ்ஹஆ'என்பது. அதாவது பொருந்திக் கொண்டேன் என்பது. இது எதைக்குறிக்கிறது என்றால் எனது மனைவியை சுவர்க்கம் வரை அழைத்துச் செல்வேன். அதுவரை ஏற்படக் கூடிய 'அனைத்து துன்பங்களையும் பிரச்சினைகளையும் நான் சகித்துக் கொள்வேன்' என்பதாகும்.
அதற்கேற்ற துனையை நாம் தேடிக் கொள்ள வழிமுறைகள் உண்டு. அதே நேரம் திருமனம் முடித்தவர்கள் என்ன செய்வது. தமது மனைவியரை தம் பொருத்தப்hட்டிற்கு ஏற்ற வழியில் கொண் வரவேண்டும். சமயத்தை அல்லது மார்க்கத்தை கடைப்பிடிக்காத வீட்டில் வறுமை ஏற்படும் என நபி முஹம்மத் (ஸல்) கூறியுள்ளார்கள். அதாவது நிம்மதி என்ற மிகப் பெரிய சொத்தில்; வறுமை நிலை ஏற்படும் என்பதாகும்.
குடும்பம் என்ற அலகு சிதைந்தால் சமூகம் என்ற அலகும் சிதைந்து விடும். சமுகம் சிதைந்து விட்டால் நாடே சிதைய ஆரம்பித்து விடும். எனவே நாடும் நாமும் நலன் பெறவேண்டும். இதற்கு குடும்த்தின் மகிழ்ச்சி மிக முக்கியம்.
கணவனுக்குறிய உரிமைகளை மனைவியும் மனைவிக்குறிய உரிமைகளை கணவனும் வழங்கவேண்டும். இதை இஸ்லாம் பின் வருமாறு மிகத் தெளிவாகக் கூறுகிறது.
'கணவன் திருப்தி அடையாத மனைவியும், மனைவி திருப்தி அடையாத கணவனும் சுவர்க்கம் புக மாட்டார்கள்' என்று கூறுகிறது.
Post a Comment