Header Ads



மஹிந்தவுடன் கட்டார் பயணமாகியுள்ள முஸ்லிம் அமைச்சர்கள்


டோஹா பொருளாதார மன்ற நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கட்டாருக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டுள்ளார்.

கட்டார் நாட்டுக்கான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இந்த விஜயத்தில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், பௌஸி, றிசாத் பதியுதீன் மற்றும் பிரதியமைச்சரான பைஸர் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர்  ஆகியோர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர் என மூத்த ஊடகவியலாளர் ஒருவர் யாழ் முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தார்.

கட்டாரில் 3 நாட்கள் தங்கியிருக்கும் இவர்கள் அங்கு பல முக்கிய நிகழ்வுகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து பங்கேற்க இருப்பதுடன், கட்டார் நாட்டின் அரசில் முக்கியஸ்தர்களுடனும் முக்கிய பேச்சுக்களில் ஈடுபடவுள்ளனர்.


3 comments:

  1. Varum pothu islathaium Sri Lanka muslimkalaium vitkamal vanka,aday mokku naihalaa neegal mahintha kallanudan thanay poiulleerhal y ungalal enraiya kurnagela vedayam peaa mudiyalla?negal unmaiel islamirha Negal oru pamara mahanukku erukkum EMAAN ungalikku ellayiaaaa...

    ReplyDelete
  2. தம்புள்ள பள்ளிவாசல் மற்றும் இலங்கையில் இருக்கும் அனைத்து பள்ளிவாசல்கள் விசயமாக ரூம் போட்டு யோசிக்க போய்விட்டார்களோ என்னமோ

    ReplyDelete
  3. அவர்களாக போனார்களா?பயமுறுத்தி வேள்விக்கு அழைத்து செல்லப்படுகிரார்களா?அல்லது அமீரின் முழு ஆட்டு
    விருந்துக்குச் செல்கிறார்களா? அல்லது முஸ்லீம்களுக்கு பிரச்சனையில்லை என ஷோ காட்ட கூட்டிப்போகிறார்களா ?
    பிரயாணம் செய்வதிலுள்ள சந்தோசம் போட்டோவில் தெரிகிறது.முஸ்லீம் அமைச்சர்களுக்கு செங் கம்பள வரவேற்பு இல்லையோ?.
    Meraan

    ReplyDelete

Powered by Blogger.