Header Ads



கண்டி, நுவரெலியா, பதுளை, மாவட்டங்களில் நிலநடுக்கம்

நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்ட நில அதிர்வு பல்லேகல பூகோல கணிப்பு மத்திய நிலையத்தில் பதிவாகியுள்ளதென பூகோல மற்றும் அகழ்வாராய்ச்சி பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி 3 ரிச்டர் அளவில் அந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதென அந்தப் பிரிவின் தலைவர் கலாநிதி என்.பி.விஜயானந்த தெரிவித்தார். நிலத்திற்கு அடியில் காணப்படும் தகடுகளில் ஏற்பட்டுள்ள சிறு உராய்வால் இந்த நில அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என அவர் குறிப்பிட்டார்.

நுவரெலியா, பதுளை, பண்டாரவளை ஆகிய மாவட்டங்களில் இன்று 20ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 அளவில் நில அதிர்வு உணரப்பட்டது.

வருடத்திற்கு இவ்வாறான அதிர்வுகள் பல இடம்பெறுவதாகவும் இது சாதாரண நிலை என்பதால் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை எனவும் பூகோல மற்றும் அகழ்வாராய்ச்சி பிரிவு குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.