இலங்கையில் முதலீடு செய்வதற்கு வெளிநாடுகள் காத்திருக்கின்றன - ஜனாதிபதி மஹிந்த
முப்பது வருடகால யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்து சமாதானம் நிலைநாட்டப்பட்டுள்ள இலங்கையில், பெருமளவு முதலீடுகளை செய்வதற்காக வெளிநாடுகள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளன என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். வியாழக்கிழமை காலை நிதி அமைச்சில் நடை பெற்ற ஆண்டறிக்கை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு கூறினார்.
இதன் போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர், பொருளாதாரம் முகாமைத்துவம் செய்யப்படுவது போன்று மக்களின் வாழ்க்கை நிலையும் முகாமைத்துவப்படுத்தப்படல் வேண்டும். பொருளாதார முகாமைத்துவம் மேற்கொள்ளப்படும் போது முக்கியமாக இளைஞர், யுவதிகளின் அபிலாஷைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். அதேபோல் நவீன தொழில்நுட்பத்தின் பக்கமும் அதிக கவனம் செலுத்தப்படல் வேண்டும்.
தொழிற்சங்க தலைவர் என்ற வகையில் தொழிற் சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு மிகவும் ஆர்வத்துடன் செயற்படுகிறேன். தொழிற் சங்கங்கள் கோரிக்கைகளை முன்வைக்கும் போது அதற்கு ஒரு எல்லை உண்டு. அதனை நன்கு புரிந்துகொண்டு தொழிற்சங்க தலைவர்கள் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். அதுவே சிறந்தது.
விவசாயத் துறையில் கவனம் செலுத்தப்படாது காணப்பட்ட நிலையில், நமது அரசாங்கம் இந்நாட்டின் விவசாயத்துறை அபிவிருத்தியின் பக்கம் அதிக கவனம் செலுத்தியமையால் முக்கியமான உணவுப் பொருட்கள் உற்பத்தியில் இலங்கை தன்னிறைவு கண்டுள்ளது. இது எமது நாட்டுக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஓமோம்...காத்திருந்து காத்திருந்து கால்வலியால் அவதிப்படுகிறார்கள்!!!!!
ReplyDeleteபம்மாத்துக்கும் அளவு வேணும், இதையெல்லாம் நம்மட மினிஸ்ரர்மார் தான் வழக்கமா சொல்லுறது. இப்ப இவரே அவங்களுக்கு சிரமம் வக்காமல் கதையடிக்க தொடங்கிட்டார்!
இலங்கையில் முதலிடவா ?அல்லது இலங்கையையே முதலீடா ?உண்மை சொல் தலைவா.
ReplyDeleteMeraan