Header Ads



தென்கிழக்கு பல்கழைக்கழகத்தின் வளர்ச்சியை பாராட்டுகிறார் உயர் கல்வியமைச்சர்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மிக விரைவில் பொறியியல் பீடம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் 7வது பொதுப் பட்டமளிப்பு விழா ஒலுவில் வளாகத்தில் வேந்தர் பேராசிரியர் அச்சி எம். இஸாக் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் திஸாநாயக்க மேற் கண்டவாறு கூறினார்.அமைச்சர் திஸாநாயக்க அங்கு தொடர்ந்து தனதுரையில்,

1995ல் பல்கலைக்கழகக் கல்லூரியாக மறைந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும் அமைச்சருமான எம்.எச்.எம். அஷ்ரபின் முயற்சியினால் றிச்சட் பத்திரன கல்வியமைச்சராக இருந்த காலத்தில் இப்பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. இன்று பல்வேறு துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வரும் இப்பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி பெரிதும் பாராட்டத்தக்கது. இதன் ஒவ்வொரு துளிப் பெருமைக்கும் நன்றிக்கும் உரியவராக மறைந்த அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் திகழ்கின்றார்.

சமூக ஒருமைப்பாட்டையும் சமாதான விழுமியங்களையும் கட்டியெழுப்பும் வகையில் செயற்படுகின்ற இப்பல்கலைக் கழகமானது தேசிய ரீதியில் முன்னணி வகிக்கின்றது. இப்பல்கலைக் கழகத்தை மிகத்தரம் வாய்ந்த ஒரு காலாசாலையாக முன்னேற்றுவதற்கு தற்போதைய உபவேந்தர் பல்வேறு கனவுகளுடன் முயற்சித்துக் கொண்டிருக்கின்றார். அவரது முயற்சியின் விளைவாகவே இங்கு விரைவில் பொறியியல் பீடம்உருவாகவுள்ளது.

அந்த வகையில், இன்று பட்டம் பெறுகின்ற பட்டதாரிகள் பல்வேறு துறைகளிலும் ஆர்வத்துடன் செயற்பட்டு தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்வதுடன் நவீன உலக செயற்பாடுகளுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் தங்களை அனுபவ ரீதியாக தயார் படுத்த முன்வருவதுடன் எதிர்கால தலைவர்களாக உருவாக வேண்டும் எனவும் கூறினார்.

1 comment:

  1. News அ வாசிக்கவே தேவை இல்லை
    அடுத்த ஆப்பு அந்தப் பல்கலைக்கழகத்துக்குத்தான் !!!

    ReplyDelete

Powered by Blogger.