யாழ்ப்பாணத்தில் வடமாகாண ஆளுநர் அலுவலகம் திறப்பு (படங்கள்)
வடமாகாண ஆளுநரின் செயலகத்தை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்தார்.
யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மாகாண ஆளுநரின் செயலகமே இன்றைய தினம் (31) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சுமார் 25 மில்லியன் ரூபா செலவில் நவீன வசதிகளைக் கொண்டதாகக் கட்டப்பட்ட இச்செயலகத்தை அமைச்சர் நாடாவை வெட்டி திறந்து வைத்ததுடன் புதிய கட்டிடத் தொகுதியையும் பார்வையிட்டார்.
இந்த நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் வடமாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ் உள்ளிட்ட மாகாணத் திணைக்களங்களின் துறைசார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.





Post a Comment