Header Ads



பலாச்சுளை சாப்பிடும் போட்டி - முதல் பரிசு வென்றார் முஸ்லிம் சகோதரர்



கேரளாவில் யார் அதிகமாக பலாச்சுளை சாப்பிடுவார் என நடத்தப்பட்ட போட்டியில் கலந்து கொண்டவர்களில், ஐந்து நிமிடத்தில், 33 சுளைகளை சாப்பிட்டவருக்கு, முதல் பரிசு கிடைத்தது. அதேபோல், இப்போட்டியில் பெண்கள் பிரிவில், 27 சுளைகளை உள்ளே தள்ளிய பெண்ணுக்கு, முதல் பரிசு வழங்கப்பட்டது.

கேரளா, கோழிக்கோடு நகரில், பீச் மரைன் மைதானத்தில், பலாச்சுளை சாப்பிடும் போட்டி, நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இதில், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு என, தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன. ஆண்கள் பிரிவில், ஆறு பேரும், பெண்கள் பிரிவில் ஏழு பேரும் பங்கேற்றனர்.

அவர்களிடம், ஐந்து நிமிடங்களில், யார் அதிகளவு பலாச்சுளை சாப்பிடுகிறார்களோ, அவருக்கு பரிசு வழங்கப்படும் என்பது குறித்து அறிவிக்கப்பட்டது. ஆண்கள் பிரிவில், 33 சுளைகளை சாப்பிட்ட முபாரக் என்பவருக்கும், பெண்கள் பிரிவில், 27 சுளைகளை மட்டுமே சாப்பிட முடிந்த மினி என்பவருக்கும், முதல் பரிசு வழங்கப்பட்டது. அவர்கள் எவ்வளவு சுளைகள் சாப்பிட்டனர் என்பதை, பலா கொட்டைகளின் எண்ணிக்கையை வைத்து கணக்கிடப்பட்டது. முடிவில், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, தலா ஒரு பலாப்பழமும் பரிசாக வழங்கப்பட்டது.

2 comments:

  1. முஸ்லிம்களின் ‘வளர்ச்சி’ க்கு மிக நல்ல உதாரணம்.
    ஸ்ரீலங்காவில் வழிபாட்டுச் சுதந்திரமில்லை ஆனால் ஜெனீவாவில் அரசுக்கு ஆதரவாக போராட்டம், அரபு தெரிந்த மெளலவிகளை அனுப்பி ஆதரவு தேடும் வேலை பார்த்தோம். அல்லாவின் இல்லம் இடிப்பு பரிசாகக் கிடைத்தது.
    இப்போ சரணாகதிக் கையெழுத்திட்டு இருக்கிறோம். இப்போ அதற்கு கேரளாவில்
    பரிசு பலாச்சுளை சாப்பிடும் போட்டியில் தங்கப்பதக்கம்!
    முஸ்லிம்களின் ‘வளர்ச்சி’ க்கு மிக நல்ல உதாரணம்.

    ReplyDelete
  2. தின்று கெட்டான் சோனகர் சேர்த்துக் கெட்டான் தமிழர் ,உடுத்திக் கெட்டான் சிங்களவர்,இப்படி செவி வழிச்
    செய்தியுண்டு.
    Meraan

    ReplyDelete

Powered by Blogger.