Header Ads



காத்தான்குடியில் ரவூப் ஹக்கீம் திறக்கவிருந்த மு. காங்கிரஸ் அலுவலகத்திற்கு தீவைப்பு


காத்தான்குடியிலிருந்து ஜூனைட்.எம்.பஹ்த்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தின் புதிய காத்தான்குடியில் இன்று (26.5.2012) திறக்கப்படவிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அலுவலகம்  அதிகாலை இனந்தெரியாதோரினால் தீ வைக்கப்பட்டுள்ளது.இதனால் இக்காரியலயத்தின் முன் கதவு மற்றும் கண்ணாடி என்பன சேதமடைந்துள்ளன.

இக்காரியாலயம் இன்று (26.5.2012)மாலை நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான றஊப் ஹக்கீமினால் திறந்து வைக்கப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த காரியாலயம் திட்டமிட்ட படி இன்று மாலை திறக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.





8 comments:

  1. Singaththin kottaikul Narikku enna kudal kaluvum velai

    ReplyDelete
  2. சுயநல அரசியலின் மூலம் இக்கட்டான இந்த சூழ்நிலையில் கூட ஒற்றுமையாக செயற்படமுடியாத எமது அரசியலின் சுயரூபம் இது

    ReplyDelete
  3. ''சிங்கத்தின் கோட்டைக்குள் நரிக்கு என்ன குடல் கழுவும் வேலை"

    நல்ல கேள்வி, இப்படிக் கேட்டுத்தான் சிங்களவன், நம்முடைய பள்ளிகளுக்கு நெருப்பு வைக்கவும்,
    உடைக்கவும் காலக்கெடு விதிக்கின்றான். வாழ்க முஸ்லிம்களின் வீரம்!

    ReplyDelete
  4. முஸ்லிம்களாகிய நமக்குள் எப்பொழுது இவ்வாறான சில்லறை பிரச்சினைகள் இல்லாமலாகின்றதோ அப்பொழுதுதான் இலங்கை முஸ்லிம்களாகிய நமக்கு விடிவு காலம்.
    குர்ஷித் மன்சூரி

    ReplyDelete
  5. singamilla illa ithu asingam,intha ariwu ketta velayala katchi [mu ka] valarume thawira maram veelnthu vidaathu.saadumaar quraanai eriththathu vela thaan ithu.

    ReplyDelete
  6. ean singam kulla naripola vela parkuthu? singama Asingam.

    ReplyDelete
  7. கேட்கவே வெட்கமாக இருக்கிறது, கேவலமான் செயல்.
    இந்த நிலைமையில் நாம் எங்கே சிங்கள இனவாதத்தை எதிர்கொள்ளப் போகின்றோம்?
    சொந்தப் பொண்டாட்டிக்கு அடிப்பதிலும், உம்மாவுக்கு தூசனம் சொல்லி ஏசுவது என்பதிலும்,
    வயதான வாப்பாவை குறை சொல்லுவதிளும்தான் முஸ்லிம் என்று சொல்லிக்கொள்பவனது வீரம் வெளிப்படுகின்றது.

    அன்னியனைக் கண்டால், போட்டிப் பாம்பாக அடங்கிப் போகின்றோம்.

    ReplyDelete
  8. இந்த இழிவான செயலை செய்தவர்கள் யாராயினும் அவர்கள் சமூக துரோகிகளே.மு.கா.என்றாலென்ன வேறு கட்சியானாலென்ன ஜன நாயக அடிப்படையில் அரசியல் செய்யும் உரிமையை கொடுக்க வேண்டும்.இருளில் இனந்தெரியாமல் வந்து தீ வைத்து நாசப்படுத்துவது அசிங்கத்திலும் அசிங்கம், எம்மை பழிவாங்கத்துடிக்கும் இனவாதிகளுக்கு வழி தேடிக்கொடுக்கும் ஈனச்செயல்.சிங்கத்தின் கோட்டை என்று வீராப்பு பேசும் சகோதரா; சமூகத்தை காட்டிக்கொடுப்பதுதானா உங்கள் சிங்கத்தின் பண்பு? அபூ சிஜா

    ReplyDelete

Powered by Blogger.