பனை மரங்களில் இருந்து நுங்கு பறிப்பதற்கு முற்றாக தடைவிதிப்பு
பனை மரங்களில் இருந்து நுங்கு பறிப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் பசுபதி சீவரட்ணம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போது யாழ்ப்பாணத்தில் நுங்கு காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் சிலர் வியாபார நோக்கம் கருதி நுங்கை முற்றவிடாமல் பனை மரங்களில் இருந்து இறக்கி விற்பனை செய்து வருகின்றனர்.
நுங்கு குலை குலையாகப் பறிக்கப்படுவதால் பனம் சார்ந்த உற்பத்திகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் கடந்த காலத்தில் பனம் கிழங்கிற்குக் கூடப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதனையடுத்து நுங்கு பறிக்கும் நடவடிக்கைகளுக்கு பனை அபிவிருத்திச் சபை முற்றாகத் தடை விதித்துள்ளது. இனிமேல் நுங்கு பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நுங்கு சாப்பிடுவதற்கு ரெடியாகிற நேரம் பார்த்து ,இடியென செய்தி போட்டு எங்களை வேதனைப் படுத்துகிறீர்களே.
ReplyDeleteMeraan