Header Ads



அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யார்..? ஒபாமாவுக்கு பின்னடைவு


அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 6-ந் தேதி நடக்கிறது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து குடியரசு கட்சி வேட்பாளர் மிட்ரோம்னி களம் இறங்குகிறார்.

இவர்கள் இருவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.   இந்த நிலையில் நடைபெற உள்ள தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்து மக்களிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

சி.பி.எல். நியூஸ் மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனங்கள் இதை நடத்தின. அதில் அதிபர் ஒபாமாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவர் குடியரசு கட்சி வேட்பாளர் மிட்ரோம்னியைவிட 3 சதவீதம் வாக்குகள் குறைவாக பெற்றுள்ளார்.

கடந்த மாதம் நடந்த கருத்து வாக்கெடுப்பில் இவர்கள் இருவரும் தலா 46 சதவீத வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனர். தற்போது மிட்ரோம்னி 3 சதவீதம் ஓட்டுகள் கூடுதலாக பெற்றுள்ளார். எனவே அதிபர் ஒபாமா தனது பிரசார வியூகத்தை வேறு கோணத்தில் மாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

1 comment:

  1. பின்னடைவு வரக்கூடாதே.ஜனாதிபதியாக இருப்பதற்கு பாலியல் விளையாட்டு நற்சான்றிதழ் இருக்கிறதுதானே .அமெரிக்க,ஐரோப்பிய பிரதமாராக , ஜனாதிபதியாக வருவதற்கு பாலியல் விளையாட்டுதான் ஆகக் கூடிய தகுதி .அதுதான் எல்லோரிடமும் உலக மயமாக்கலுடன்
    தாராளமாக இருக்கிறதே .
    Meeraan

    ReplyDelete

Powered by Blogger.