இஸ்ரேல் தூதரகம் இலங்கையில் ஆரம்பிக்கப்படுவது முஸ்லிம்களுக்கு ஆபத்தாக அமையும்
இஸ்ரேல் என்றொரு நாட்டையே நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் இலங்கையில் இஸ்ரேல் தூதரகம் ஒன்று நிலைகொள்வதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியுமென அமைச்சர் ரவூப் ஹக்கீம் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதுதொடர்பில் ரவூப் ஹக்கீம் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
இலங்கை எமது தாய் நாடு. முஸ்லிம்கள் நாட்டுப்பற்றுடையவர்கள். உலகில் எமது இனத்திற்கு எதிராக செயற்படும் இஸ்ரேலை எமது நாட்டிற்குள் எவ்வகையிலும் அனுமதிக்க முடியாது. முஸ்லிம்களின் நிலங்களை பலாத்காரமாக ஆக்கிரமித்து நிலை கொண்டிருக்கும் இஸ்ரேல் பலஸ்தீனர்களுக்கு இழைக்கும் கொடுமைகளை முழு உலகமும் அறியும்.
இலங்கையில் இஸ்ரேல் தூதரகம் திறக்கப்பட்டால் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் அவர்கள் மூலம் அதிகரிக்கும் நிலை உருவாகும்.
முஸ்லிம் காங்கிரஸ் தனது கொள்கைகளில் எப்போதும் உறுதியாக இருக்கிறது. இஸ்ரேல் தூதரகம் விடயத்திலும் எமது நிலைப்பாடு இதுவே. இதுவிடயத்தில் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவேண்டும்.
.jpg)
இதற்காக அரசாங்கத்திலிருந்து என்ன செய்வீர்கள் என்று பார்ப்போம்.
ReplyDeleteவாய்ப்பேச்சு மட்டும்தான் இருப்பதாக நினைக்கின்றேன். உதாரணம் தம்புள்ள பள்ளிவாயல் பிரச்சினை
I think he is a Back Borne Muslim but he is afraid to a split in SLMC.he can do what he said but behind him....? something wrong...
ReplyDeletewill see... what will happen.
our shareeah party vehemently condmns the governmnt fr their coward act against muslims in the recnt past.we urge all muslims to show their unity against govmnt.once again muslim?politicns have showed their true colors.
ReplyDeleteShareeah Party?
ReplyDeleteWhat is that in Sri Lanka?