Header Ads



அவஸ்திரேலியாவில் காலை உடைத்துக்கொண்ட ஊடக அமைச்சர் நாடு திரும்பினார்

அவுஸ்திரேலியாவில் திடீர் விபத்துக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்கெல்ல இன்று வெள்ளிக்கிழமை நாடு திரும்பியுள்ளார்.

அவரது மகன் பங்குபற்றும் கிரிக்கெட் போட்டியை கண்டு களிப்பதற்காக ஹெகலிய அவுஸ்திரேலியா பயணமானார். இச்சந்தர்ப்பத்தில் ஹோட்டல் ஒன்றில் விழுந்ததன் காரணமாக அவருக்கு சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த மூன்று மாத காலத்துக்கும் மேலாக ஹெகலிய அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த நிலையில் இன்றைய தினம் இலங்கை வந்தடைந்தார்.

1 comment:

  1. சூதாட்ட கிரிகெட்டை பார்க்க இவ்வளவு செலாவா?இது யார் வீட்டு செலவு?அப்போ அடுத்த வாரமும் பொருட்களின் விலை உயருமா தலைவா?
    Meraan

    ReplyDelete

Powered by Blogger.