Header Ads



எனக்கு பிரதியமைச்சர் பதவி வேண்டாம் - நாமல் ராஜபக்ஸ

தனக்குப் பிரதி அமைச்சர் பதவி வேண்டாம் என மகிந்த ராஜபக்சவிடம் கூறியுள்ளதாக, மகிந்த ராஜபக்சவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச கூறியுள்ளார். திவயின சிங்கள வாரஇதழுக்கு அளித்துள்ள செவ்விஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றுவதிலேயே தாம் திருப்தி கொள்வதாகவும், அதனால் தாம் இப்போது பிரதி அமைச்சர் பதவியைக் கேட்பதில்லை என்று முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு பிரதி அமைச்சர் பதவிகளை வழங்க மகிந்த ராஜபக்ச எடுத்துள்ள முடிவை வரவேற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

நிசாந்த முத்துஹெட்டிகம, சனத் ஜெயசூரிய, லக்ஸ்மன் வசந்த பெரேரா, சரத் வீரசேகர, ஹேமல் குணசேகர, இந்திக, நிரஞ்சன் விக்கிரமசிங்க, திகாம்பரம், பிரபா கணேசன் ஆகியோர் விரைவில் பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. பிரதி அமைச்சுப் பதவி வேண்டாமா?ஜனாதிபதிப் பதவி வேண்டுமென்றால் தோப்பனார் வெளி நாட்டில்பெல்லி டான்ஸ் பார்த்து கொண்டு உல்லாசமாக இருக்கும் போதே ஆட்சி கவிழ்ப்பு நடாத்தி உலகத்தின் இளைய ஜனாதிபதி என்ற பட்டத்தைப் பெற்றுக்கொள்ளலாமே !
    இருக்கிற அமைச்சர்களுக்கும், ஆடம்பரச் செலவுகளுக்கும் காசு போதாமல் கண், மண் தெரியாத அளவுக்கு எல்லாமே
    விலை உயர்த்தி விட்டார்கள் .இன்னும் வேறு எதை உயர்த்தி வரப்போகிற பிரதிகளுக்கு படி அளக்கப்போகிரார்கள் .

    ReplyDelete

Powered by Blogger.