Header Ads



பாகிஸ்தான் இலங்கை கிரிக்கெட் - பர்வீஸ் மஹ்ரூப் அவுட்

பாகிஸ்தானுடனான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியில் சகலதுறை வீரர் ஜீவன்த மென்டிஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் தில்ஹார பெர்னாண்டோ ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப்புக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது.

ஆசிய கிண்ண தொடரில் வாய்ப்பு கிடைக்காத சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். எனினும் சகலதுறை வீரர் பர்வீஸ் மஹ்ரூப் மற்றும் சுழற் பந்து வீச்சாளர் அஜந்த மென்டிஸ் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை

ஒருநாள் அணி

மஹேல ஜயவர்தன (தலைவர்), திலகரத்ன டில்ஷான், குமார் சங்கக்கார (விக்கெட் காப்பாளர்), தினேஷ் சந்திமால், அன்ஜலோ மத்தியூஸ், லஹிரு திரிமான்ன, ஜீவன்த மென்டிஸ், திஸர பெரேரா, நுவன் குலசேகர, சசித்ர சேனாநாக்க, லசித் மாலிங்க, ரங்கன ஹேரத், உபுல் தரங்க, நுவன் பிரதீப், டில்ஹார பெர்னாண்டோ.

இருபது – 20 அணி

 மஹேல ஜயவர்தன (தலைவர்), திலகரத்ன டில்ஷான், குமார் சங்கக்கார (விக்கெட் காப்பாளர்), தினேஷ் சந்திமால், அன்ஜலோ மத்தியூஸ், லஹிரு திரிமான்ன, கவ்ஷல்ய லொக்குவாரச்சி, திஸர பெரேரா, நுவன் குலசேகர, சசித்ர சேனாநாயக்க, லசித் மாலிங்க, சாமர கபுகெதர, உபுல் தரங்க, இசுரு உதான.

2 comments:

  1. மஹ்ரூப் ஒரு முஸ்லிம் வீரர். ஒரு காலத்தில் இலங்கை அணிக்காக துடுப்பாட்டம், பந்துவீச்சு என
    அனைத்திலும் சிறப்பாக விளையாடி இருந்தார். அதே போல இந்திய அணி சார்பாக இர்பான்
    பத்தானும் இரு துறைகளிலும் சிறப்பாக விளையாடி இருந்தார். இந்த இரண்டு வீரர்களும் தமது
    ஆட்டத் திறமையை இழந்ததால் அணிகளிலிருந்து நீக்கப் பட்டனர்.

    சில காலம் கழித்து இருவருக்கும் மீண்டும் வாய்ப்புக் கிடைத்தது. இர்பான் பத்தன் ஓரளவு சிறப்பாக
    கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தினார். ஆனால் நமது நாட்டு வீரரான மஹ்ரூப் குறிப்பிடத் தக்க அளவு பிரகாசிக்கவில்லை.
    இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முதல் அண்மையில் நடைபெற்ற போட்டிகள் வரை போதிய அளவு வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

    மஹ்ரூப் தெரிவு செய்யப்படவில்லை என்பது செய்தியாக வெளியிடும் அளவுக்கு முக்கியத்துவம் கொண்ட ஒன்றல்ல.
    மஹ்ரூப் இலங்கை அணிக்காக தெரிவு செய்யப்பட மாட்டார் என்பது கிரிகட் ரசிகர்கள் மத்தியில் சந்தேகத்திற்கு இடமின்றி
    எதிர்பார்க்கப் பட்ட ஒன்று.

    ஆனால் தில்ஹார பெர்னாண்டோ மீண்டும் தெரிவு செய்யப்பட்டது மாட்டுமே சர்ச்சைக்குரிய விடயம்.

    ReplyDelete
  2. mahroof namly muslim his mother sayed he dont like to go masjid and she will not force to pray,why your people worry about this guy,we have to worry more subject,regarding our religion and masjids
    ask dua for masjids
    thanks

    ReplyDelete

Powered by Blogger.