இலங்கையின் கல்வி அபிவிருத்திக்கு அவுஸ்திரேலியாவும், உலக வங்கியும் நிதியுதவி
இலங்கையிலுள்ள 4 மில்லியன் பாடசாலை மாணவர்களின் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு உதவிவழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் முன்வந்துள்ளது.
பிராந்திய ரீதியில் காணப்படும் கல்விசார் சமனற்ற தன்மையைப் போக்கு வதற்கும், கல்வி மூலமான சமூக ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கும் நான்கு வருடங்களைக் கொண்ட இத்திட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
இத்திட்டத்துக்கு 4.6 பில்லியன் ரூபாய்களை அவுஸ்திரேலியா வழங்க விருப்பதுடன், 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை உலக வங்கி சலுகை அடிப்படையிலான கடனாக வழங்கவிருப்ப தாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ரொபின் முடே குறிப் பிட்டார்.
உலக வங்கியின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படவிருக்கும் இத்திட்டம் இலங்கை அரசாங்கத்தால் நடைமுறைப் படுத்தப்படும் என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் ஊடாக 4 மில்லியன் பாடசாலை மாணவர்கள், 2 லட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்கள், 3 ஆயிரத்து 500 கல்வி முகாமையாளர்கள், நிர்வாக அதிகாரிகள் எனப் பலர் நன்மை அடைவார்கள் என்றும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ரொபின் முடே கூறினார்.
பாடசாலை உட்கட்டுமானங்களை அபிவிருத்தி செய்தல், சுற்றுநிருபங் களை மாற்றியமைத்தல் மற்றும் துறைசார் ஆசிரியர்களை உருவாக்குதல் என்பன இத்திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவிருப்பதுடன், இத்திட்டமானது பாடசாலைகளைக் கண்காணிப்பதற்கும், மதிப்பிடுவதற்கும் பாடசாலை நிர்வாகங்களுக்கு உதவும் வகையில் அமையும் என்றும் குறிப் பிட்டார்.

Post a Comment