Header Ads



தெஹிவளை குர்ஆன் மத்ரசா மீது கல்வீச்சு, மாடுகளை அறுக்கும் இடமெனவும் குற்றச்சாட்டு..!

தெஹிவளை மிருகக்காட்சி சாலை கல்விஹார பிளேஸில் அமைந்திருக்கும் தாருர் ரஹ்மான்  குர்ஆன் மத்ரசாவின் செயற்பாடுகளை எதிர்த்து இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது.

இன்று பி.ப. 2:30 மணியளவில் முச்சக்கர வண்டிகளில் வந்த இனந்தெரியாத கோஷ்டி ஒன்று மதரசா மீது கற்களை வீசிவிட்டுச் சென்றிருந்தது. பின்னர் பிற்பகல் 4 மணியளவில் கல்விஹாரவில் இருந்து பிக்குமார் மற்றும் பொதுமக்களைக் கொண்ட ஆர்ப்பாட்டம் ஒன்று புறப்பட்டு மத்ரசாவைத் தாண்டி மிருகக்காட்சி வீதி சந்திக்கு வந்து சேர்ந்தது.

அதில் கலந்து கொண்டோர் மதரசாவை அங்கிருந்து அகற்றுமாறு கோசமிட்டதுடன் சுலோகங்களையும் தாங்கியிருந்தனர். அவ்விடத்தில் போலீசார் அதிகளவில் வருகை தந்திருந்ததுடன், மதரசா பகுதியில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டனர். இவ்வார்ப்பாட்டத்தில் ஐம்பது தொடக்கம் நூறு பேர் வரை கலந்துகொண்டனர். மேலும் இதில் கலந்துகொண்ட பொதுமக்கள் இந்தப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்றும், வேறு இடங்களில் இருந்து அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

குறித்த இடம் மாடுகளை அறுக்கும் மடுவமாக பாவிக்கப்படுவதாகவும் அதை மூட வேண்டும் என்பதும் முக்கியமான கோசமாக ஆர்ப்பாட்டக்காரர்களால் முன்வைக்கப்பட்டிருந்தது.
 
ஜாமியுஸ் ஷபாப் நிறுவனத்தின் காணியில் அமைந்திருக்கும் மேற்படி பள்ளிவாயல் மற்றும் குர்ஆன் மதரசா, பள்ளிவாயல் மற்றும் குர்ஆன் மதரசா என முறைப்படி பதிவு செய்யப்பட்டிருப்பதுடன், பதினைந்து வருடங்களாக  இவ்விடத்தில் இயங்கி வருகின்றன.

1 comment:

  1. ஹஜ்ஜுப் பெருநாளுக்காக குர்பான் கொடுப்பதற்காக ஆடு,மாட்டை வெட்டியிருப்பார்கள்.இதுக்குப் போய் ஆட்டோ பிடித்து வந்து கல் எறியவேண்டுமா?ஏய் யாரங்கே, அடுத்த தடவை கடையிலே வாங்கியாவது கொடுங்கப்பா.
    Yaal mannan

    ReplyDelete

Powered by Blogger.