மஹிந்த ராஜபக்ஸவிற்கு சரத் பொன்சேக்கா அச்சுறுத்தலாக அமையமாட்டார் - விமல் வீரவன்ச
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அச்சுறுத்தலாக அமைய மாட்டாது என ஜே.என்.பி.யின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகா போட்டியிட்ட காலத்தில் அவருக்கு மக்கள் மத்தியில் கூடுதலான வரவேற்பு காணப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மிகவும் தந்திரோபாயமாக எதிர்க்கட்சி விவகாரங்களை கையாண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவை ஒருபோதும் சரத் பொன்சேகாவினால் பதிலீடு செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகளும் ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பும் வலுவான இந்த அரசாங்கத்தை கவிழ்க்க பகிரத் பிரயத்தனம் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகாவின் விடுதலை அரசியல் வட்டாரத்தில் எவ்வித அதிர்வினையும் ஏற்படுத்தாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிரேஸ்ட அரசியல்வாதிகள் சரத் பொன்சேகாவின் வரையறைகளை அறிந்து வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

விமல் கையைக் காட்டுவதே அச்சுறுத்தலாகதானே
ReplyDeleteஇருக்கிறது.
Meraan