யாழ்ப்பாணத்தில் அகில இலங்கை முஸ்லிம் லீக் (படங்கள் இணைப்பு)
தகவலும், படமும் - எம்.லாபிர்
அகில இலங்கை முஸ்லிம் லீக் தேசிய தலைவரும் முன்னால் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய கபீர் ஹாஷிம், கொழும்பு மாநகர முதல்வர் எ.ஜே.எம்.முஸம்மில், மேல்மாகாண சபை உறுப்பினர் முஜுபுர்ரஹ்மான் ஆகியோர் அடங்கிய குழுவினர் அன்மையில் யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரம் புதிய சோனகர் தெருப்பகுதிக்கு விஷேட விஜயம் ஒன்றினை மேற்கொண்டு அங்கு மீளக்குடியேறிய மக்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்தனர். யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இலங்கை முஸ்லிம் லீக் உறுப்பினர் எம்.எஸ் றஹீம் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இவ்விஜயத்தின்போது யாழ் புதிய சோன்கர் தெருப்பிரதேசத்தில் காணப்படும் பாவனைக்குதவாத கைவிடப்பட்ட கிணறுகளைப் புனரமைத்து மக்கள் பாவனைக்குவிடும் நிகழ்வொன்று இடம்பெற்றது. 150,000.00 ரூபா செலவில் இக்கிணறுகள் புனரமைக்கப்பட்டன.
ஜெலீல் மாஸ்டர் முன்னிப்பதால் இதற்கும் யாராவது போலீசில் முறைப்பாடு செய்துவிடப்போகிறார்கள் .
ReplyDeleteஅல்லது ஜமாஅத் பட்டம் சூட்டி இந்த புனரமைப்பை புறக்கணிக்கப் போகிறார்கள் .
Meeraan