ஸகாத் நிதியுதவி வழங்கும் நிகழ்வு (படங்கள் இணைப்பு)
எம்.பரீட்
கிண்ணியா ஜெம்இய்யத்துல் உலமா சபையின் பைத்துஸ் ஸகாத் நிதியத்தின் குழுவினரல் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பத்தினருக்கு உதவி நன்கொடை மற்றும் வாழ்வாதார ஸகாத் நிதியுதவி வழங்கும் நிகழ்வொன்று இன்று 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிண்ணியா புஹாரிப் பள்ளிவாயல் மண்டபத்தில் கிண்ணியா பைத்துஸ் ஸகாத் நிதிய உதவித் தலைவரும் ஒய்வு பெற்ற அதிபருமாகிய எஸ்.எம்.சரீப் தலைமையில் நடை பெற்றது.
இந்நிகழ்வில் 42 குடும்பத்தினருக்கு வாழ்வாதார உதவி நன் கொடை நிதியுதவியும், 12 குடும்பத்தினர்களுக்கு வீட்டுக்கான அனுமதிக் கடிதங்களும், வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் கிண்ணியா ஜெம் இய்யத்துல் உலமா சபை உதவித் தலைவர் ஏ.ஜே.எம்.றியாஸ் மௌலவி, உறுப்பினர் எம்.ரீ.ஹபீபுள்ளா மௌலவி, உட்பட இந்நிதயத்திற்கு நிதியுhவி வழங்கிய வர்த்தகர்கள், மந்தை வளர்ப்போர்கள்,விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment