Header Ads



இலங்கை முஸ்லிம்களுக்கு பதிலளிக்கிறார் வேங்கை.சு.செ.இப்ராஹிம்

அன்பிற்கினிய சமுதாய சொந்தங்களுக்கு இனிய ஸலாம்... துஆ...

நான் கீற்று இணையதளத்தில் எழுதி இருந்த "பள்ளிவாசல் இடிப்பும்... ராஜபக்சேவின் கொழுப்பும்" என்கிற கட்டுரைக்கு மறுப்பளித்து ஜப்னா முஸ்லிம் {www.jefnamuslim.com} என்கிற இணையத்தின்  வழியாக சகோதரர் சுவைர் மீரான் என்பவர் பதிவிட்டு இருக்கிறார்,,, அவரது பதிவில்  புலிகள் இயக்கம் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திய இழப்ப்புகள் என்கிற பெயரில் என்னை கடுமையான  வார்த்தைகளால் தாக்கி எழுதி இருக்கிறார்...

தாக்கப்பட்டது இறைவனின் இல்லம்... ஒரு முஸ்லிமாக உலகில் எங்கு முஸ்லிம்களுக்கு அநீதி இலைக்கபட்டாளும் எம்மை போன்றோரின் இதயம் கனப்பது இயற்க்கை... அந்த அடிப்படையில் இலங்கையில் சிறுபான்மை இனமாக வாழக்கூடிய எம்மக்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாவும்  வாழவேண்டுமென நினைப்பது தவாறான செயலாக இருக்க முடியாது...

தம்புள்ள பள்ளிவாசல்  தாக்குதல் சம்பவத்திற்கு தமிழகத்தில் கண்டங்களை பதிவு செய்த அனைவரையும் நீலிக்கண்ணீர்  வடிக்கும் முதலைகள் என்கிறார் சகோதரர்... தமிழகத்தில் இருக்கக்கூடிய இஸ்லாமிய இயக்கங்கள்  ஆரம்பகாலங்களில் எத்துனை அடக்குமுறைகளை சந்தித்து அரசுகளின் பொய் வழக்குகளை சந்தித்து சிறைவாசங்களை சந்தித்து இன்றைக்கு சமுதாய உரிமைகளுக்கு சட்டம் இயற்றப்படும் அவைகளிலும் தடம் பதித்துள்ளார்கள் என்பது எல்லாம் தெரிந்த கட்டுரையாளருக்கு தெரியாமலிருக்க வாய்ப்பில்லை... அப்படிப்பட்ட போராளிகளை இவர் நீலிகண்ணீர் வடிக்கும் முதலைகள் என்கிறார்...

நான் பெயர்தாங்கி முஸ்லிமா இல்லை பெயருக்குறிய முஸ்லிமா என்பதை பற்றிய ஆராச்சியிலும் ஈடுபட்டுள்ளார்... மகிழ்ச்சி...

சகோதரா... உங்கள் நாட்டு அதிபரின் உருவபொம்மை எரிக்கபட்டதும் கொடி எரிக்கப்பட்டதும் உங்களுக்கு வருத்தமளிக்களாம் ஆனால் இடிக்கப்பட்டது நமது இறையவனின் இல்லம் அந்த சம்பவத்திற்கு முன்னாள் நீங்கள் குறிபிட்டுள்ள சம்பவங்கள் எமக்கு பெரிதாக தெரியவில்லை...

புலிகளை ஒழிக்கிறோம் என்கிற பெயரில் அங்குள்ள தமிழர்களை முழுமையாக கொண்டோலித்த கொடுமை வேறு யாருக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதுதான் எம்மை போன்றவர்களின் விருப்பம்...

உங்களுடைய வார்த்தைகளுக்கு முழுமையாக எம்மால் பதில் அழிக்க முடியும் ஆனால் அதில் எம் சமூகத்தின் மரியாதை அடங்கியுள்ளது... நீங்கள் எப்படி ஒரு நாட்டில் சிறுபான்மைகளாக வாழ்கிறீர்களோ அதேபோல்தான் நாங்களும் இந்திய நாட்டில் சிறுபன்மைகளாக வாழ்கிறோம் எண்ணூறு ஆண்டுகாலம் இந்நாட்டை ஆண்ட எம்மக்கள் இன்றைக்கும் அடிப்படை உரிமைகளுக்காக போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்... இந்நிலை எமது அண்டையில்  வாழக்கூடியவர்களுக்கு வந்துவிடக்கூடாது என்பதுதான் எமது நோக்கம்... பழையவற்ற தோண்டிக் கொண்டிருந்தால் பலன் எதுவும் கிடைக்கபோவதில்லை...

மேலும் சகோதரர் சுவைர் மீரான் என்னை புலிகளின் ஆதரவாளன் இல்லை இல்லை புலிகளின் இயக்கத்தை சார்ந்தவனாகவே அடையாளபடுத்திட முனைந்துள்ளார்... சகோதரா... நாங்கள் வாதிடுவது வாழ்க்கையை இழந்துவிட்ட தமிழ் மக்களுக்காக புலிகளுக்காக அல்ல என்பதை இதை போன்று இன்னும் ஆயிரமாயிரம் கட்டுரைகள் வெளியிட்டாலும் உங்களால் மறைக்கமுடியாது...

நான் எனது கட்டுரையில் பல பொய்களை சொல்லியிருக்கிறேன் எனகுறிபிடும் சகோதரர் எனது கட்டுரையின் முழுமையான வடிவத்தை முழுதுமாக படிக்காமல் அவசரகோலத்தில் பதில் கொடுத்துள்ளார்... அதைபற்றிய கவலைகள் எமக்கில்லை... காரணம் இதை போன்று எவ்வளவோ விமர்சனங்களை கண்டவர்கள் நாங்கள்...

இறுதியாக சகோதரருக்கு நான் சொல்லிகொள்வது தமிழகத்தில் நாங்கள் தமிழ் உறவுகளுடன் இணைந்து களமாடககூடிய இனிமையான காலமிது அதன்மூலமாக தமிழ் மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே வலிமையான உறவை மேம்படுத்திட முனையும் எம்மை எந்த சக்திகளாலும் முடக்கிவிட முடியாது... உண்மையான நேர்மையான அனைத்து காரியங்களுக்கும் அல்லாஹு நிச்சயமாக வெற்றியை தருவான்...

வஸ்ஸலாம்
துஆக்களுடன்...
வேங்கை.சு.செ.இப்ராஹீம்


8 comments:

  1. சுருக்கமாக ஒரு கேள்வி,


    புலிகளில் இருந்த முஸ்லிம் போராளிகள் என்று சிலரது பெயர்களையும், இம்ரான் படையணி முளிமின் பெயரால் உருவாக்கப்பட்டது என்றும் நீங்கள் எழுதியுள்ளது பச்சைப் பொய்தானே? இதற்குப் பதில் சொல்லுங்களேன்.

    ReplyDelete
  2. ''வேங்கை'' என்று உங்கள் பெயரில் வைத்துக் கொண்டிருப்பது? ஏன் பதில் சொல்லவில்லை?
    பிரபாகரன் தாசன் என்று அல்லது புலிதாசன் என்று வைத்திருக்கலாமே?

    ReplyDelete
  3. அன்பான வேங்கைகு நியாயம் கதைப்பதென்றால் புலி முஸ்லிம்களு செய்த கொடுமைக்கு பிரபாகரனின் உருவ பொம்மையை எரித்து நீங்கள் ஒரு வேங்கைதைதான் என்று நிரூபித்து காட்டுங்கள் பார்போம்
    யாழ்குருவி

    ReplyDelete
  4. mahir paris1610/05/2012, 12:06

    வேங்கை அவர்களே உங்களிடத்தில் கேட்பது ஒன்றே ஒன்றுதான் தம்புல்லைஇல் ஒரு பள்ளிவசல்தான் அனால் புலிகளால் யாழ்ப்பணத்தில் பத்துக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் அடித்து நோருக்கப்பட்டேத்தே அப்போது இறைவனின் இல்லங்கள் என்று உங்களுக்கு தெரிய வில்லையாஅப்போது உங்கள் இதயம் கனக்கவில்லையா

    ReplyDelete
  5. வேங்கை 1990 இல் எங்கிருந்தது ?

    ReplyDelete
  6. வேங்கை 1990 இல் வட,கிழக்கில் கொலை வெறியுடன் அலைந்து திரிந்து முஸ்லீம் ,சிங்கள ,தமிழர்களின் இரத்தம் குடித்துக் கொண்டிருந்தது .விளக்கம் எழுதிய காகிதப் புலி 20 வருடத்திக்கு முன் எங்காவது பால் குடித்து நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு சினிமா கூத்தாடிகளின் பின்னால் திரிந்து இருப்பான்.உன்னுடைய விளக்கம் எழுதும் தொழிலை லொள்ளுடன் வைத்துகொள்ளவும்.O. K.
    Meeraan

    ReplyDelete
  7. TNTJ உடன் தொடர்பு கொண்டு இலங்கை எங்கே இருக்கிறது என்று முதலில் தெரிந்து கொள்ளவும் .பின் குரான், சுன்னாஹ் அடிப்படையில் இஸ்லாத்தை தெரிந்து ,புரிந்து தொல் மற்றும் அவரின் கூட்டத்திற்கு எத்தி வைத்து
    செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் தேடிக்கொள்ளவும் .ஏனெனில் தலித் என்று தேவையில்லாத பெயரை சூட்டிக்கொண்டு கண்டவனுக்கெல்லாம் மரியாதை என்ற பெயரில் பயந்து அடிமைத்தனமாக வாழ்ந்து இழிவுபட்டுக்கொண்டிருக்கிரார்கள் .இஸ்லாம் மட்டும் தான் சாதி வெறியை ஒழித்த மார்க்கம்.
    மனிதன்

    ReplyDelete
  8. வேங்கை இப்ராஹீம்(எ)
    சு.செய்யது இப்ராஹீம்
    பிறந்தது: இளையான்குடி சிவகங்கை மாவட்டம்
    தமிழ்நாடு
    வசிப்பது: மலேசியா
    vengaiibrahim@yahoo.com
    vengaiibrahim@gmail.com

    ReplyDelete

Powered by Blogger.