பகிரங்க நடனமாடிய 6 பேருக்கு மதகுருமார் மரணதண்டனை தீர்ப்பு - பாகிஸ்தானில் சம்பவம்
பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் கொகிஸ்தான் என்ற மலைப் பிரதேச மாவட்டம் உள்ளது. இங்கு மலைவாழ் பழங்குடியின மக்கள் அதிக அளவில் உள்ளனர்.
இந்த நிலையில் அங்கு காடா என்ற கிராமத்தில் ஒரு திருமண விழா நடந்தது. அதில் ஆட்டம், பாட்டம் இடம் பெற்றது. அதற்கு ஏற்ப ஆண்களும், பெண்களும் பாட்டுப்பாடி நடனம் ஆடினர்.
இது மத சம்பிரதாயங்களுக்கு எதிரானது என அப்பகுதி மத குருமார்கள் கருதினர். இதைத் தொடர்ந்து திருமணத்தின் போது ஆடி பாடிய 4 பெண்கள் மற்றும் 2 ஆண்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.
இதையடுத்து முதலில் ஆண்களை கொல்ல ஏற்பாடுகள் நடந்தது. இதை அறிந்த பெண்கள் தப்பி ஓடி தலைமறைவானார்கள். இதுபற்றி அறிந்த போலீசார் அந்த கிராமத்துக்கு விரைந்து சென்று, காப்பாற்ற தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். இந்த தகவலை கொகிஸ்தான் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அப்துல் மஜீத் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

ஆட்டம்,பாட்டத்திட்கெல்லாம்மரண தீர்ப்பு வழங்கும் முட்டாள்கள் இருக்க மட்டும் இஸ்லாமிய விரோதிகளுக்கு கொண்டாட்டம்தான்.மத குருமார்களுக்கு பாக்கிஸ்தான் அரசு மார்க்க அறிவை புகட்ட வேண்டும்.இஸ்லாத்தில் எதற்கு மரண தண்டனை என்ற விவஸ்தை கூட தெரியாத அடி முட்டாள் குருக்கள்.அந்த கிராமத்து மக்களை இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்.
ReplyDeleteMeraan
இஸ்லாம் என்றால் என்ன என்று தெரிந்திருந்தால் இப்படியொரு கலியாணமும்,அறிவு கெட்ட தீர்ப்பும் செய்திகளில் அடிபட்டிருக்காது.
ReplyDeleteDoaud Tharik