Header Ads



ஹபீஸ் சயீத்திற்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர் விலைபேசும் இந்தியா



லஸ்கர் ஈ தொய்பா நிறுவனரும் மும்பை தாக்குதலின் மூளையாக செயல்பட்டதாக இந்தியா குற்றம்சுமத்தும் ஹபீஸ் சயீத்தை ஒப்படைத்தால் பாகிஸ்தானிற்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்க இந்தியா தயார் என இந்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் பாகிஸ்தானில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இரு நாட்டு உள்துறை செயலாளர்கள் மட்டத்திலான அளவில் நடைபெற்ற இரண்டு நாள்கள் மாநாட்டிற்கு பின் ஆர்.கே. சிங் செய்தியாளர்கள் மாநாட்டில் இதனை தெரிவித்தார்.  

அப்போது செய்தியாளர் ஒருவர் ஹபீஸ் சயீத் குறித்து தகவல் தந்தால் 10௦ மில்லியன் டாலர் அளிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில் இத் தொகையை இந்தியாவே வைத்துக்கொள்ளுமா என்ற கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் ஹபீஸ் சயீத்தை ஒப்படைத்தால் பாகிஸ்தானிற்கே அத்தொகை அளிக்கப்படும் என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.