Header Ads



யாழ்ப்பாணத்தில் உடல் ஒட்டிப் பிறந்த குழந்தைகள் 60 நிமிடங்களில் மரணித்தன

உடல் ஒட்டிய நிலையில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் பிறந்து ஒரு மணி நேரத்தில் இறந்து போயின.  இந்த நிகழ்வு யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. அந்த உடல் பெற்றோரின் சம்மதத்துடன் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது அங்கு இடம்பெறும் கண்காட்சியில் அந்த உடல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

மல்லாகத்தைச் சேர்ந்த சூரியகுமார் வசந்தாதேவி என்பவருக்கு அறுவைச் சிகிச்சை மூலம் உடல் ஒட்டிய நிலையில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. இரண்டு குழந்தைகளினதும் நெஞ்சு, வயிறு என்ப ஒட்டிய நிலையில் உள்ளன. இரண்டு தலை, நான்கு கைகள், நான்கு கால்கள் காணப்படும் இந்தக் குழந்தைகளின் உடலில் உரோமங்கள் செறிவாகக் காணப்படுகின்றன.
 
குழந்தைகளின் உறுப்புக்கள் ஆரம்பத்திலேயே பிரியாது, தாமதமாகப் பிரிந்துள்ளன. இதனாலேயே ஏனைய உறுப்புக்கள் பிரிந்த போதும் நெஞ்சுப் பகுதியும் வயிற்றுப் பகுதியும் பிரியவில்லை எனயாழ். போதனா வைத்தியசாலை மகப்பேற்றுப் பெண் நோயியல் வைத்திய நிபுணர் குலசிங்கம் சுரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.