Header Ads



1975 முதல் படுகொலை செய்த 90 பேரின் ஜனாஸாக்களை பலஸ்தீனிடம் ஒப்படைத்த இஸ்ரேல்


bbc

இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களின் போது கொல்லப்பட்ட தொண்ணூறுக்கும் அதிகமான பாலத்தீனர்களின் சடல எச்சங்கள், ரமல்லாவுக்கு கொண்டுவரப்பட்டு, பாலத்தீன அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டன.

இரு தரப்புக்கும் இடையிலான நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான ஒரு நடவடிக்கை இது என்று இஸ்ரேல் கூறுகிறது. 1975 ஆம் ஆண்டு முதல் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியவர்கள், இராணுவ நடவடிக்கைகளில் கொல்லப்பட்டவர்கள் ஆகியோரின் சடல எச்சங்கள் இதில் அடங்குகின்றன.
இதற்காக ஒரு சிறப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்படும்.

இறந்தவர்களை மாவீரர்கள் என்று பாலத்தீனர்கள் கூறும் அதேவேளை, இஸ்ரேல் அவர்களை பயங்கரவரவாதிகள் என்று கூறுகிறது. இஸ்ரேலிய சிறையில் இருக்கும் பாலத்தீன கைதிகள் நடத்தும் ஒட்டுமொத்தமான உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காகச் செய்யப்பட்ட உடன்பாட்டின், ஒரு பகுதியாகவே இந்த சடலங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.