Header Ads



Motorolaவி​ன் புதிய DEFY MINI கைப்பேசிகள்

கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான Motorola தனது புதிய அறிமுகமாக DEFY MINI கைப்பேசிகளை வெளியிட்டுள்ளது. இக்கைப்பேசியானது 600MHz CPUவை கொண்டுள்ளதுடன் 512MB பிரதான நினைவகத்தையும் கொண்டுள்ளது.

மேலும் 3G தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதோடு HSDPA, Wi-Fi n, Bluetooth 2.1 ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளது. இவை தவிர சிறப்பாக GPS வசதியும் காணப்படுகின்றது. நீரிலிருந்தான பாதுகாப்பு வசதி, சூழல் மாசுக்களிலிருந்தான பாதுகாப்பு வசதி என்பற்றையும் உள்ளடக்கியுள்ளது.

தற்போது பிரித்தானியாவில் மட்டும் அறிமுகமாகியுள்ள இந்த DEFY MINI கைப்பேசிகள் விரைவில் ஏனைய நாட்டு சந்தைகளிலும் கிடைக்கப்பெறும் என்று Motorola நிறுவனம் தெரிவித்துள்ளது. 162 யூரோ பெறுமதியான இக்கைப்பேசியை Amazon.co.uk என்ற இணையத்தில் பதிவு செய்வதன் மூலமும் பெற்றுக்கொள்ள முடியும்.

No comments

Powered by Blogger.