Header Ads



அபூ ஹனீபாவின் அண்டை வீட்டான்

நன்றி - உஸ்தாத் மன்சூர்


இமாம் அபூ ஹனீபாவின் வீட்டில் ஓர் அறை. சிறியதொரு விளக்கு அங்கு ஒளி வீசுகிறது. இமாம் தொழுகைக்கான ஒரு பாயில் உட்கார்ந்திருக்கிறார். அண்டை வீட்டான் இனிய குரலில் பாடுவது அவருக்குக் கேட்கிறது)

அண்டை வீட்டானின் குரல் :

என்னை அவர்கள் அழிந்தொழிய விட்டு விட்டார்கள்.

எத்தகையதொரு இளைஞனை அப்படி விட்டு விட்டார்கள்?

துரதிஷ்டம் பிடித்த நாளை   அனுபவிக்கவும்

வெறும் இடைவெளி நிரப்பவுமே அவன் வாழ்கிறான்.

(இமாமின் முகத்தில் கவலையும், இரக்கமும் தோன்றுகிறது. பிறகு அவரது முகம் புன்முறுவலால் பிரகாசிக்கிறது. அவர் மெதுவாகப் பிரார்;த்திக்கிறார்.

இமாம் : 'இறைவா என் அண்டை வீட்டானுக்கு வழிகாட்டு. அவனுக்கு உன்னிடம் மீளும் நிலையை ஏற்படுத்து. நீ தவ்பாவை மிகவும் ஏற்பவன். மிகுந்த இரக்கமுள்ளவன்'

(பின்னர் இமாம் தொழுகைக்காக எழுந்து மிக பயபக்தியோடு தக்பீர் கட்டுகிறார்)

(அண்டை வீட்டான் தொடர்ந்து பாடுகிறான். எனினும் இமாம் தொழுகையில் மூழ்கி விட்டமையால் அவருக்கு அண்டை வீட்டானின் குரல் அறவே கேட்கவில்லை போன்றே தெரிகிறது)

             (2)

(அண்டை வீட்டான் ஆஸிம் இப்னு அப்துல் அஸீஸின் வீட்டில் ஓர் எளிய அறை. ஆஸிம் ஒரு இத்துப் போன பாயில் உட்கார்ந்திருக்கிறான். முன்னால் மது நிறைந்த பெரும் பாத்திர மொன்றிருக்கிறது. அவன் மது அருந்திக் கொண்டே பாடுகிறான்)

என்னை அவர்கள் அழிந்தொழிய விட்டு விட்டார்கள்.  எத்தகையதொரு இளைஞனை அப்படி விட்டு விட்டார்கள். துரதிஷ்டம் பிடித்த நாளை அனுபவிக்கவும், வெறும் இடைவெளி நிரப்பவுமே அவன் வாழ்கிறான்.

(அவனது மனைவி கோபத்துடன் அறையினுள் நுழைகிறாள்)

மனைவி : இரவு முழுக்க போதையுடன் வெறியாட உனக்கு  வெட்கமாக இல்லை?!

ஆஸிம் : பகல் முழுக்கவும் நான் போதையுடன் ஆடவேண்டுமென்றா நினைக்கிறாய். அப்படி நான் செய்தால் உனக்கும் குடும்பத்திற்கும் யார் உழைத்துப் போடுவது?

மனைவி : நீர் உழைத்து எமக்கு என்ன எஞ்சியிருக்கிறது?! நீர் உழைப்பதை மதுவில் செலவழித்து முடிக்கிறீர்.

ஆஸிம் : பகலில் உழைக்க இதுவே எனக்குப் பலம் தருகிறது.

மனைவி : இல்லை,இல்லை ஷைத்தான் மதுவின் மூலம் உம்மை வழிகெடுத்ததிலிருந்து உமது உழைப்பும் சீரழிந்து, பொருளும் கெட்டழிகிறது.

ஆஸிம் : பெண்ணே! உண்மைகளைத் தலைகீழாகப் புரட்டிப் பார்க்காதே. என் பொருட்கள் தேங்கி உழைப்பு குறைந்த போதுதான் இப்பாணத்தை நான் கொண்டேன். சரி, சரி நீ இப்போது படுக்கைக்குப் போ. அல்லது உமக்கும் ஒரு கிண்ணம் மது தரட்டுமா?

மனைவி : ஆஸிம் உங்களது இந்த சகிக்க முடியாத பகிடியை விடுங்கள். நாம் வீட்டுக் கூலி கட்டாது விடும் 3வது மாதம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆஸிம் : (பொருட்படுத்தாமல்) பிறகு எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துக் கொடுத்து விட்டால் போகிறது.

மனைவி : எப்போது?

ஆஸிம் : சந்தை நிலை சீராகும் போது

மனைவி : வீட்டுச் சொந்தக்காரன் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டான்.

ஆஸிம் : அப்படியானால் தலையைக் கொண்டு போய் சுவரில் அடிக்கட்டும். (மீண்டும் பாட ஆரம்பிக்கிறான்)

மனைவி : சரி! உம் குரலையாவது தாழ்த்துவீர். அடுத்த வீட்டாருக்குத் தொந்தரவு கொடுக்காதீர்கள்.

ஆஸிம் : அண்டை வீட்டார்?! அவர்கள் இப்போது தூங்கியிருப்பார்கள்.

மனைவி : இதோ உங்கள் அண்டை வீட்டார் ஷெய்க் அபூ ஹனீபா இரவு முழுக்க விழித்திருந்து வணங்குகிறார்.

ஆஸிம் : அவரோடு எனக்கென்ன வேலை? எம்மிருவருக்கும் ஒவ்வொரு வகையான தஹஜ்ஜுத்.

மனைவி : உனது இந்தப் பாட்டால் அவரது தொழுகையையும், குர்ஆன் ஓதலையும் குழப்பி விடுவது பற்றி உமக்கு வெட்கமாயில்லை?! ஐயோ! உமது நிலை?!

ஆஸிம் : எனது வீட்டில் நான் சுதந்திரமாக இருக்கிறேன். எனது குரலை அவரால் சகித்துக் கொள்ள முடியாவிட்டால் தன் வீட்டை விட்டு விட்டு தூரமாக வேறு வீட்டில் குடியேற முடியும்.

மனைவி : ஐயோ! உமக்குத் தெரியவில்லை.

ஆஸிம்: எனக்கு என்ன தெரியவில்லை?

மனைவி : இந்த அபூ ஹனீபா இல்லாவிட்டால் ஒரு மாதத்திற்கு முன்னரே வீட்டுச் சொந்தக்காரன் இந்த வீட்டிலிருந்து எம்மை விரட்டியிருப்பான்.

ஆஸிம் : எப்படி?

மனைவி : அவர்தான் எமது 3 மாத வாடகையைச் செலுத்தினார்.

ஆஸிம் : (பொருட்படுத்தாமல், பகட்டுடனும்) ஹஹ் ஹா! உனக்குத் தெரியுமா அவர் ஏன் அப்படிச் செய்தாரென்று?

மனைவி : ஏன்?

ஆஸிம் : எனது பாட்டு அவரை மயக்கி விட்டது. எனது இனிய குரலை அவர் இழக்க விரும்பவில்லை.. அதனால்தான் (பாடுகிறான்)

 என்னை அவர்கள் அழிந்தொழிய விட்டு விட்டார்கள்.......'

(மனைவி நம்பிக்கையிழந்து அழுது கொண்டே அங்கிருந்து வெளியேறுகிறார்.)

             (3)

(மேலே குறிப்பிட்ட இரு நிகழ்வுகள் நடந்து 3 இரவுகளின் பின்னர் அபூ ஹனீபா வழமை போல் தஹஜ்ஜுத் தொழுது கொண்டிருக்கிறார். ஒரு தொழுகையை முடித்து ஸலாம் கொடுத்த போது அவரது மனைவி உம்மு ஹனீபா அங்கு வருகிறார்)

உம்மு ஹனீபா : மன்னிக்கவும். நீங்கள் நாளை நோன்பு பிடிப்பதாயின் ஸஹர் செய்வதற்கான நேரம் இதுதான்.

அபூஹனீபா : உங்களுக்கு நன்றிகள். உள்ளே வாருங்கள்.

உம்மு ஹனீபா : இல்லை. நான் உங்களுக்கு ஸஹர் உணவு கொண்டு வரச் செல்கிறேன்.

அபூஹனீபா : இல்லை. இங்கே வாருங்கள். எமது அண்டை வீட்டாரின் நிலைமை என்ன என்று சொல்லுங்கள். இன்று அவரது மனைவியை நீங்கள் சந்திக்கவில்லையா?

உம்மு ஹனீபா : நீங்கள் சொன்னது போல நானின்று அவளை சந்தித்தேன். அவள் நோய்வாய்ப்பட்டு படுக்கையிலிருந்தாள்.

 அபூஹனீபா : ஐயோ பாவம்! அதுதான் போலும் இந்த இரு இரவுகளாக அவளது கணவனின் குரல் கேட்கவில்லை.

உம்மு ஹனீபா : இல்லை. இல்லை. அதுவல்ல காரணம். தனது கணவன் எங்கு போனாறென்று அவளுக்குத் தெரியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன் போனவன்தான், இன்னும் திரும்பவில்லை.

அபூஹனீபா : அவன் பற்றி எந்தச் செய்தியும் அவளுக்கு வரவில்லையா?

உம்மு ஹனீபா : இல்லை.

அபூ ஹனீபா : ஐயோ பாவம்! அந்த அப்பாவிப் பெண்!

உம்மு ஹனீபா : அவனிடமிருந்தும், அவனது ஆட்டங்களிலிருந்தும் விடுதலை பெற்று நிம்மதி அடைந்தாள்.

அபூஹனீபா : உம்மு ஹனீபா! அவன் அவளுடைய கணவன், குடும்பத்தின் தந்தை, பராமரிப்பவன்.

உம்மு ஹனீபா : இவன் தான் அவளுக்கு இந்த நோயைக் கொடுத்தான்.

அபூஹனீபா : அவளுக்காக அவனைத் தேடிக் கண்டு பிடித்துக் கொடுப்பது எமது கடமை. ஐயோ!'இது ஏற்கனவே எனக்குத் தெரிந் திருக்கக் கூடாதா!

உம்மு ஹனீபா : உங்கள் மாணவர் அபூ யூஸுபிடம் நீங்கள் விரும்பினால் இப்பொறுப்பை விடலாமே?

அபூ ஹனீபா : ஆம், ஆம், அபூ யூஸுப் தவிர வேறு யாரும் இதற்குப் பொருத்தமில்லை.

                                   (4)

(அபூ ஹனீபாவின் வீடுளூ முற்பகல் நேரம்ளூ அபூ யூஸுப் அங்கே செல்கிறார்ளூ அபூ ஹனீபா அவரை மிகுந்த ஆவலுடன் எதிர்கொள்கிறார்)

அபூஹனீபா : அபூ யூஸுப் நீங்கள் ஏதாவது கண்டு பிடித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

அபூ யூசுப் : ஆம், அவ்வாறுதான்.



அபூ ஹனீபா : இன்ஷா அல்லாஹ் அது நல்லதாகத்தான் இருக்கும்.



அபூ யூசுப் : இரவுக் காவலர்கள் அவனைப் பாதையில் போதையுடன் கண்டு பிடித்துக் கொண்டு போய்விட்டார்கள் என்று அறிந்தேன்.



அபூ ஹனீபா : 'லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்'. ஏன் அவன் வீட்டுக்கு வெளியே போதையுடன் திரிய வேண்டும்.



அபூ யூசுப் : அவன் வெட்கமற்ற குடிகார மட்டைளூ வீட்டிலும் குடிப்பான்ளூ வெளியிலும் குடிப்பான்.



அபூ ஹனீபா : ஐயோ! பாவம் அப்பாவி. நண்பா வா போவோம். கவர்னர் ஈஸா இப்னு மூஸாவிடம் அவனுக்காக சிபாரிசு செய்வோம்.



அபூ  யூசுப் :  இமாம்! இப்னு மூஸா நீங்கள் அவரது வீட்டுக்கு வருவதால் அவரை கண்ணியப்படுத்த வேண்டுமென எவ்வளவோ தந்திரங்கள் செய்தார். நீங்கள் போகவில்லை. இப்போது ஒரு பாவி, குடிகாரன், மக்களை அவனது தீங்கிலிருந்து அல்லாஹ்  காப்பாற்றியுள்ளான். அவனுக்காக  சிபாரிசு செய்ய கவர்னரி டம் போகிறீர்கள்!

அபூ ஹனீபா : யஃகூப் எனக்கு ஆட்சேபனை தெரிவிக்கிறீரா?!



அபூ யூசுப் : ஆம்! தலைவரே ஆம்! மார்க்கம் என்பதே உபதேசிப்பதுதான். உபதேசிப்பது யஃகூபாகவும் உபதேசிக்கப்படுபவர் அபூஹ னீபாவாக இருந்தாலும் சரியே!



அபூ ஹனீபா : உண்மைதான்! இங்கு என்ன தீமையைக் கண்டு விட்டீர்?



அபூ யூசுப் : அல்லாஹ் விதித்த தண்டனையின் போது யாருக்கும் சிபாரிசு செய்யும் உரிமை கிடையாது.



அபூ ஹனீபா : யஃகூப் நான் அங்கே நிற்கவில்லை. நான் தண்டனை நிறைவேற்றல் குறித்து சிபாரிசு செய்ய முயலவில்லை. அதன் பிறகு விடுதலை செய்து விடுமாறே கேட்கப் போகிறேன்.

அபூ யூசுப் : இவனுக்கு சிறைதான் பொருத்தம். அவனது குரல் தூங்குபவர்களுக்குத் தொந்தரவு.



அபூ ஹனீபா : அவனது குரல் மிக இனிமையாக, இரக்க இசை அமைப்பு கொண்டதாக இருந்தது. தூங்குபவனை அது தாலாட்டும். நோய்வாய்ப்பட்டு கவலையுடன் இருப்ப வனுக்கும் அது நிம்மதி கொடுக்கும். நடு நிசி இரவுகளின் போது அது எனக்கு எத்தனை  முறை ஆறுதலைத் தந்துள்ளது.



அபூயூசுப் : ஆனால் அவன் பாடுவதோடு இரவு முழுக்கக் குடித்துக் கொண்டிருந்தான்.



அபூஹனீபா : (கோபமாக) யஃகூப் கவர்னரிடம் செல்ல என்னோடு வருகிறீரா அல்லது நான் மட்டும் போகட்டுமா?



அபூயூசுப் : இல்லை! நானும் கூட வருகிறேன். ஆனால் அபூஹனீபா இதனைச் செய்வது சரிதான் என்ற திருப்தி எனக்கு ஏற்பட்டதன் பின்னர்.

அபூஹனீபா : யஃகூப் அவனுக்கு மனைவி, பிள்ளைகள் இருக்கிறார்கள்.



அபூ யூசுப் : அவனால் அவனது மனைவிக்கோ, பிள்ளைகளுக்கோ எந்த நன்மையும் கிடையாது. நீங்கள் அவர்களுக்கு செலவழிக்கிறீர்கள். அவன் தனது செல்வத்தை குடியில் வீணாக்குகிறான். இதுதான் தெரிந்த விடயமாயிற்றே.



அபூ ஹனீபா : இளைஞனே நீ என்ன பேசுகிறாய்! இந்த எனது அண்டை வீட்டான் எனக்கு சில நன்மைகள் செய்துள்ளான். அதற்குப் பகரமாக நான் ஏதாவது செய்வதுதான் மனிதத் தன்மை.



அபூ யூசுப் : இது போன்ற ஆச்சரியமான செய்தியை என்றும் நான் கேட்டதில்லை. ஒரு குடிகாரன் அபூ ஹனீபாவுக்கு என்ன நன்மைகள் செய்திருக்க முடியும்.



அபூ ஹனீபா : யஃகூப் உங்களுக்கு என்ன நடந்தது. நான் சொல்வது உண்மை என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லையா?



அபூ யூசுப் : ஷெய்க் அவர்களே! விஷயம் எனக்குத் தெளிவாக வேண்டும் என விரும்புகிறேன். அதற்காக விளக்கமாக நீங்கள் சொல்ல வேண்டுமென எதிர்பார்க்கிறேன்.



அபூ ஹனீபா : (சற்றுக் கோபத்துடன்) அப்படியானால் நான் சொல்வதைக் கேள்.விளங்கிக் கொள். இந்த அண்டை வீட்டான் தூக்கத்தை வெறுத்து இரவு முழுக்க அந்தப் பாட்டையே திருப்பித் திருப்பிப் படிக்கிறான். அல்லாஹ்விடமிருந்து அவன் எந்த ஸவாபையும் எதிர்பார்க்கவில்லை. மக்க ளிடமிருந்தும் எதனையும் அவன் எதிர்பார்க்க வில்லை. அப்படியிருக்கும் போது நான் அல்லாஹ்விடம் பிரார்த்தித்து அவனை நெருங்கி அவனிடமிருப்பவற்றைப் பெறுவதில் ஆசை கொள்கிறேன். இந்நிலையில் நானெப்படி வணங்;கலைப் பாரமாகக் கொள்ள முடியும். அதில் சோம்பல்பட முடியும். இவ்வாறு நான் எனக்கே  அடிக்கடி சொல்லிக் கொள்வேன்.



அபூ யூசுப் : சரி உங்களுக்குக் கிடைத்த ஒரு நன்மை, அடுத்தது என்ன?



அபூ ஹனீபா : குறிப்பிட்ட இப்பாட்டையே அவன் தெரிவு செய்யக் காரணம் அவன் எதிர்பார்த்த சில மனிதர்களாலேயே அவனுக்கு அநியாயம் நிகழ்ந்திருக்கக் கூடும். இப்பாட்டைத் திருப்பித் திருப்பிப் படித்து அதன் மூலம் உளக் கவலையை நீக்கிக் கொள்ள முயல்கிறான். தனக்கேற்பட்ட அநியாயத்தின் தாக்கத்தைக் குறைத்துக் கொள்ள முயல்கிறான். இவ்வாறு நான் நினைப்பேன். அல்லாஹ் என்னை மக்கள் எவரது தேவையும் இல்லாதவனாக ஆக்கினான். எனவே அவர்களால் என் மீது எந்த அநியாயமும் நிகழவில்லை. அவனிடமே தேவையுடையவனாக  என்னை ஆக்கினான். அல்லாஹ் நீதியானவன்ளூ மிகுந்த இரக்கமுள்ளவன்ளூ யாருக்கும் அநியாய மிழைக்கமாட்டான்ளூ யாரையும் கடுமையாக நடத்தமாட்டான்ளூ இதனை நினைத்து நான் அல்லாஹ்வைப் புகழ்வேன்.



அபூ யூசுப் :  இது இரண்டாவது, மூன்றாவது?



அபூ ஹனீபா : இரவுக் காவலர்களுக்குத் தன்னைக் காட்டிக் கொடுக்கும் வகையில் எப்படி இவன் தன் குரலுயர்த்திச் சத்தமிட்டுப் பாடுகிறான் என நான் ஆச்சரியப்படுவதுண்டு. ஒரு நாள் நான் நின்று வணங்குகிறேன். அவன் பாடும் சத்தம் எனக்குக் கேட்கிறது. நான் நினைத்துக் கொள்கிறேன். அல்லாஹ் எவ்வளவு தூரம் அமைதியாக இருக்கிறான். அவனை மறைத்து வைத்துள்ளான். இப்படி பகிரங்கப்படுத்திப் பாவம் புரிபவனையே அவனை மறைக்கிறானாயின், மறைந்து வாழும் தன் அடியார்களை எவ்வளவு தூரம் மறைத்து வைப்பான்...!



(அபூ யூசுப் இவ்வளவு நேரம் அபூ ஹனீபா சொல்வதை அவருக்கு விளங்காமல் எழுதி வந்தார். அபூ ஹனீபா கேள்விக்குப் பதில் சொல்வதிலேயே கவனமாக இருந்தார். ஆனால் அபூ யூசுபை திடீரென அவர் அவதானிக்கிறார்)

அபூ ஹனீபா : யஃகூப் என்ன செய்கிறீர்? என்னைப் பேச விட்டு விட்டு வேறு  வேலையில் ஈடுபட்டிருக்கிறீரா?



அபூ யூசுப் : தலைவரே! இல்லை நீங்கள் சொல்வதைத்தான் நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.



அபூ ஹனீபா : ஆ! நீர் வேண்டுமென்றே எனக்கு முரண்பட்டு என்னை இழுத்து வந்து விட்டீர். அப்படித்தானா?



அபூ யூசுப் : உண்மைதான் இமாம் அவர்களே. இன்று உங்களுடன் மோசமாக நடந்து கொண்டமையை பொருட்படுத்தாதீர்கள்.



அபூ ஹனீபா : சரி இப்போது கவர்னரிடம் போவோம். வாருங்கள்.



அபூ யூசுப் : முதலில் சொல்ல வந்ததைத்  தொடருங்கள். நான்காவது என்ன?



அபூ ஹனீபா : உமது தந்திரம் விளங்கி விட்டது. இனி எழும்புங்கள். போவோம்.



கவர்னர் : அபூ ஹனீபா உங்களை வரவேற்கிறேன்.



அபூ ஹனீபா : ஈஸா உமது பரிவாரத்தினர் என்னோடு அப்படி ஏன் நடந்து கொண்டார்கள்?



கவர்னர் : அப்படி என்ன அவர்கள் செய்து விட்டார்கள்?



அபூ ஹனீபா : எனது கோவேறு கழுதையை அனைத்தவாறே என்னை இறங்க விடாது வந்தார்கள். இந்த விரிப்புகளையும் அது மிதித்து விட்டது.



கவர்னர் : அபூ ஹனீபா! உங்களை கண்ணியப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு அப்படி கட்டளையிட்டேன்.



அபூ ஹனீபா : (விளையாட்டாக) அபூ யூசுப் எழுந்திருங்கள் நாங்கள் போவோம். நான் கேட்கப் போக்கும் தேவை நிறைவேற்றித் தராதிருக்க ஏதாவது காரணம் சொல்லலாம் என்று கவர்னர் அவ்வளவு தூரம் எம்மை கண்ணியப் படுத்தினார்.



கவர்னர் : (சிரித்தவாறு) அபூ ஹனீபா நான் அப்படிச் செய்வேனா? உங்களது தேவையொன்ற நிறைவேற்றித்தருதல் எனக்கு எவ்வளவோ சந்தோஷத்தைத் தரும்! இந்தப் பெருமையைப் பெற்றுக்கொள்ள எவ்வளவோ காலமாக நாம் முயற்சித்தோம் முடியாமல் போய் விட்டது. சொல்லுங்கள், முறையிடுங்கள் நானும் என்னைச் சேர்ந்தோரும் உங்களது விருப்பத்திற்கேட்ப நடந்து கொள்வோம். 

அபூ ஹனீபா : எனது மிக நெருக்கமான அண்டைவீட்டார் அவரை உங்களது இராக்காவளர்கள் பிடித்து வந்துவிட்டார்கள் அவரை பார்க்க விரும்புகிறேன்.

கவர்னர் : இமாம் உங்களது பரிந்துரையை நாம் ஏற்றுக் கொண்டோம்.



அபூ ஹனீபா : முதலில் அவர் செய்த குற்றம் பற்றி நீங்கள் கேட்கவில்லையா?



கவர்னர் : அது என்ன குற்றமானாலும் உங்களது பரிந்துரையை நான் மறுதலிக்க மாட்டேன்.



அபூ ஹனீபா : கவர்னர் அவர்களே அவ்வாராயின் அவரை நான் பார்க்க முடியுமா?



கவர்னர் : (பக்கத்தில் நின்ற பொலீஸைப் பார்த்து) அவனை அழைத்து வா.



பொலீஸ் : தலைவரே யாரை அழைத்து வரட்டும்.?



கவர்னர் : என்ன உனக்குப் புரிய வில்லையா? சிறைப்பட்டவர்களில் அபூஹனீபாவின் அண்டை வீட்டான் என விசாரி. அவரை அழைத்துக் கொண்டு எம்மிடம் வா!



அபூ ஹனீபா : அவரது பெயர் ஆஸிம் அப்துல் அஸீஸ்.



கவர்னர் : ஆஸிம் அப்துல் அஸீஸ் என்ற பெயருள்ள அனைவரையும் அழைத்து வா! போ!



பொலீஸ் : தலைவரே! அவ்வாறே செய்கிறேன்.



கவர்னர் : அபூ ஹனீபா வேறு ஏதாவது தேவைகள்....?



அபூ ஹனீபா : இல்லை வேறொன்றுமில்லை. அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி தரட்டும்.



கவர்னர் : ஏதாவது சாப்பிடகிறீPர்களா?



அபூ ஹனீபா : நான் இன்று நோன்பு பிடித்துள்ளேன்.



கவர்னர் : இன்று நீங்கள்  நோன்பு படிக்காதிருக்கக்கூடாதா?!

11

அபூ ஹனீபா : இன்று நோன்பு பிடிக்க வேண்டி ஏற்பட்டு விட்டது.



அபு யூசுப் : தலைவரே இன்று அவர் நோன்பு பிடிக்கும் நாள்.



அபூ ஹனீபா : (கண்டிக்கும் தோரணையில்) அபு யூசுப்!



கவர்னர் : அபூ ஹனீபா அவரைக் கடிந்து கொள்ளாதீர்கள் 35 வருடங்களாக நீங்கள் தாவூத் (அலை) அவர்களைப் போன்று ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு பிடிப்பது எமக்கு தெரியாமலில்லை.

எனவே இந்த இளைஞன் ஏதாவது சாப்பிடட்டுமே.



அபூ ஹனீபா : இப்னு ஈஸா இவர் அபூ யூசுப் நான் நோன்பு பிடிக்கும் போது அவரும் நோற்பார். நான் நோன்பை விடும் நாளில் அவரும் நோன்பு நோற்க மாட்டார்.

(பொலிஸ் காரன் கையில் விலங்குடன் ஒருவனை அழைத்து வருகிறான்)



பொலீஸ் : அந்தப் பெயரில் இவரைத் தவிர வேறு யாரும் இருக்க வில்லை.



கவர்னர் : அபூ ஹனீபா நீங்கள் கேட்ட அண்டைவீட்டார் இவர்தானா?

.

அபூ ஹனீபா : இவராகத்தான் இருக்க வேண்டாம்.



கவர்னர் : ஆச்சரியமாக இருக்கிறது. அவரை உமக்குத் தெரியாதா?



அபூ ஹனீபா : அவரது முகத்தைத் தெரியாது அவரது குரலைத் தெரியும்



கவர்னர் : (ஆச்சரியத்துடன்) குரலா?!



அபூ ஹனீபா : ஆம் தலைவரே குரலைத்தான்! அவர் ஒவ்வொரு நாள் இரவும் பாடுவார். என்னை அவர்கள் அழிந்தொழிய விட்டு விட்டார்கள் எத்தகையதொரு இளைஞனை அப்படி விட்டு விட்டார்கள்?! துரதிஷ்டம் பிடித்த நாளை அனுபவிக்கவும் வெறும் இடைவெளி நிரப்பவுமே அவன் வாழ்கிறான்.



ஆஸிம் : ஐயோ! இமாம் அவர்களே அப்படி நான் பாடுவதை நீங்கள் கேட்டுக் கொண்டிருந்தீர்களா?! இனிமேல் இந்த வகையில் மீண்டும் செய்ய மாட்டேன் என நான் வாக்குறுதி அளிக்கிறேன்.



அபூ ஹனீபா : இல்லை! அப்படி நீ மீண்டும் செய்யலாம். இராக்காவலர்கள் உனக்கு அல்லாஹ் அழகிய குரலைக் கொடுத்துள்ளான் அதனைப் பயன்படுத்தி நீ உனக்கு கழடைத்த இறையருளைக் காட்டப்படுகிறாய் என்பதற்காக உன்னைப் பிடித்துச் சென்றிருக்க முடியாது.



ஆஸிம் : ஆம்! இராக்காவலர்கள் என்னை அதற்காக என்னைப் பிடித்துச் செல்ல வில்லை.



அபூ ஹனீபா : அவ்வாறாயின் 'உன்னை அவர்கள் அழிந்தொழிய விட்டு விட்டார்கள்' எனப் பகிரங்கமாக அவர்களை நீ குற்றம் சாட்டுகிறாய் என நினைத்து படித்துச் சென்றிருக்கலாமா?



ஆஸிம் : இமாம் அவர்களே இல்லை நான் மிக மோசமானவனாக இருந்தேன்...



அபூ ஹனீபா : (இடையில் குறுக்கிட்டு) அடுத்தவர்கள் குர்ஆன் ஓதுவதில் ஆறதல் காண முற்படுவது போன்று நீ பாட்டுப் பாடுவதில் ஆறுதல் தேட முயன்றாய் - இதனைத்தானே இப்போது சொல்லப் பார்த்தாய்.



ஆஸிம் : இல்லை இமாம் அவர்களே நான்....



அபூ ஹனீபா : (இடையில் குறுக்கிட்டு) ஆஸிம் மறுக்காதே. பிழையான பாட்டுக்களை; பாடுவதற்கு பதிலாக உனது அழகான குரலால் குர்ஆனை ஓதுதல் அல்லாஹ் உனக்குப் புரிந்த அருளுக்கு நன்றி செலுத்துவதாக அமையும் என்று சொல்ல உன்னை சந்திக்க நான் வரவிருந்தேன் என்பது உனக்குத் தெரியாதா?!  



ஆஸிம் : (தெளிவாகவும், உறுதியாகவும்) இமாம் அவர்களே நான் மது குடித்து வந்தேன்.

.

அபூ ஹனீபா : ஆஸிம் அது எனக்குத் தெரியும்.



ஆஸிம் : அது உங்களுக்குத் தெரியும் ?!



அபூ ஹனீபா : பொய்யையும் பொய்யையும் நீ இணைத்துச் செய்கிறாய் என்று எனக்குத் தெரியும். ஆஸிம் ஆனால் நீ அல் குர்ஆனை ஓதிக் கொண்டிருக்கிறாய் என வைத்துக் கொள் - அப்போது நீ மது அருந்திக் கொண்டு ஓதவாயா?!



ஆஸிம் : இமாம் அவர்ளே அந்நிலையை விட்டு அல்லாஹ் பாதுகாக்கட்டும். (அழுகிறார்)



அபூ ஹனீபா : ஏனழுகிறாய்? நான் உண்னை கண்டிக்க வரவில்லை எனது அன்புக்குரிய பக்கத்து வீட்டானே உன் நிலையை கண்டு போகவே வந்தேன். இரவின் இருட்டில் உனது அழகிய குரல் எனது தனிமையைப் போக்கியது கொஞ்ச நாட்களாக அதனை நான் கேட்கவில்லை எனவே தான் உன்னைத் தேடினேன்.



ஆஸிம் : (தொடர்ந்து அழுகிறார்) இமாம் அவர்களே என்னைப் பற்றி நீங்கள் விசாரிக்கிறீர்கள், என்னைப் பார்க்க வருகிறீர்கள், ஒவ்வொரு நாளும் நான் அல்லாஹ்வுக்கு மாறு செய்வது உங்களுக்கு தெரிந்தும் கூட!



அபூ ஹனீபா : ஆஸிம் இது நான் பக்கத்து

வீட்டானுக்கு செலுத்த வேண்டிய கடமை அல்லாஹ் மட்டுமே தனது அடியார்கள் செய்த பாவத்தை விசாரிப்பவன். விரும்பியவர்களை மண்ணிப்பவன், விரும்பியவர்களை தண்டிப்பவன்.



ஆஸிம் : இமாம் உங்களுக்கு எப்படி நன்றி செலுத்துவது என்று தெரியவில்லை. எனினும் நான் மிகத் தூய்மையாக பாவமண்ணிப்பபு கேட்கப் போகிறேன். அப்போது உங்களது பக்கத்து வீட்டானாக இருக்க நன் தகுதியடைவேன்.



அபூ ஹனீபா : ஆஸிம் அல்லாஹ் உமக்கு பரகத் செய்யட்டும். இப்போது நீங்கள் என்பவை உதவி, உபகாரம் செய்து விட்டீர்கள்.



ஆஸிம் : இமாம் நீங்கள் என்ன சொல்கிறீர்கள். நீங்கள் தான் எனக்கு உதவியும் உபகாரமும் செய்தீர்கள்.



அபூ ஹனீபா : அப்துல் அஸீஸின் மகனே பொறு! ஒவ்வொரு இரவும் அல்லாஹ் உனக்கு வழிகாட்ட வேண்டும், உனக்குப் பாவ மண்ணிப்பைத் தர வேண்டும் என நான் பிரார்த்தித்து வந்தேன். உன் குரல் எனக்குக் கேட்காத போது நீயும் சிறைப்பட்டாய் என்று அறிந்த போது நானே அறியாத ஏதொ என் பாவச் செயல்களால் தான் எனது பிரார்த்தனை அங்கீகரிக்கப் படவில்லை எனப் பயந்தேன். இப்போது நீ அல்லாஹ் எனது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான், என் மீது அவன் கோபமாக இல்லை என்பதை எனக்கு உணர்த்தினாய்? அப்படியிருந்த நீ எனக்கு உதவி உபகாரம் செய்ய வில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?!



ஆஸிம் : (அழுது கொண்டு) அபூ ஹனீபா முஸ்லிமகளின் இமாமே எனக்கு நீங்கள் இன்னொரு உதவி செய்ய மாட்டீர்களா?



அபூ ஹனீபா : ஆஸிம் சொல்லுங்கள்.

.

ஆஸிம் : அல்லாஹ்விடம் மிகச் சிறந்த செயல் ஒன்றை சொல்லுங்கள் நான் அதனைச் செய்கிறேன்.



அபூ ஹனீபா : உமக்கு கஷ்டமாக இருந்தாலுமா?



ஆஸிம் : ஆம் கஷ்டமாக இருந்தாலும்.



அபூ ஹனீபா : ஆஸிம் அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்தல்.



ஆஸிம் : அப்படியாயின் ஷஹீதாகும் வரை அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வேன்.



அபூ ஹனீபா : ஆஸிம் நீ மனைவி மக்கள் உடையவர் அவர்கள் விடயத்தில் ஜிஹாத் செய்.



ஆஸிம் : இல்லை நான் அல்லாஹ் பாதையில் ஜிஹாத் செய்வதை மிகவும் விரும்புகிறேன்.



அபூ ஹனீபா : உனது மனைவி, பிள்ளைகள் விடயத்தில் ஜிஹாத் செய்வதும் அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதுதான்.



கவர்னர் : ஆஸிம் போ நான் உன்னை விடுதலை செய்கிறேன். 



ஆஸிம் : தலைவரே உங்களுக்கு அல்லாஹ் நற்கூலி தரட்டும்.



கவர்னர் : இல்லை நீயே நற்கூலியைப் பெற்றுக் கொண்டாய். அபூ ஹனீபா எம்மை சந்திக்கும் நல்வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தாய் அல்லவா அதனால் தான்.

பொலிஸ் இங்கு கவனி!



பொலீஸ் : தலைவரே என்ன செய்யட்டும்.



கவர்னர் : ஆஸிக்கு ஆயிரம் திர்ஹம் கொடுக்குமாறு சொல். அஸிம் பிடிபட்ட நாளிலிருந்து இன்று வரைபிடிபட்ட எல்லோரையும் விடுதலை செய்யும் மாறும் சொல்.



அபூ ஹனீபா : நன்றிகளனைத்தும் அல்லாஹ்வுக்கே. ஈஸா நீங்கள் எமக்கு ஏதாவது உபகாரம் செய்வதில் உறுதியாக இருக்கிறீர்கள்.



கவர்னர் : ஆபூ ஹனீபா எனது வாழ்வில் இது எனக்கு மிகவும் சந்தோஷமான நான். அதற்காக நான் எனது வாழ் நாற்களையே விற்றாலும் நானே இலாபமடைந்தவனாவேன்.

No comments

Powered by Blogger.