இலங்கைவரும் இந்தியா தூதுக்குழு முஸ்லிம் காங்கிரஸினையும் சந்திக்கும்
இலங்கைக்கு வருகை தரும் இந்திய நாடாளுமன்றக் குழு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸினையும் சந்தித்துப் பேசவுள்ளது. இந்த நாடாளுமன்றக் குழுவின் இலங்கை வருகை தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள நிகழ்ச்சி நிரலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை திங்கட்கிழமை, ஏப்ரல் 16 ஆம் திகதி இந்தியாவிலிருந்து தூதுக்குழு இலங்கைக்கு புறப்படுகிறது.
ஏப்ரல் 17 ஆம் திகதி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் சந்திப்பு நடைபெறுமெனவும் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.

Post a Comment