Header Ads



பிரேசிலில் மனித மாமிசம் சாப்பிடும் மனிதர்கள்

பிரேசிலில் உள்ள கரான்கன்ஸ் நகரில் இந்த ஆண்டு தொடக்கத்தில் 2 பெண்கள் திடீரென மாயமாகி விட்டனர். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. எனவே போலீசார் அவர்களை தேடிவந்தனர். இந்த நிலையில் கரான்கன்ஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் பிணங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து அங்கு போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அங்கு தோண்டி பார்த்தபோது மாயமான 2 பெண்களின் பிணங்கள் புதைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அங்கு குடியிருந்த ஒரு ஆண் மற்றும் 2 பெண்களை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அந்த பெண்களை கொலை செய்த நபர்கள் அவர்களின் மாமிசத்தை சாப்பிட்டு விட்டு உடலின் மீதமிருந்த பாகத்தை புதைத்தது தெரிய வந்தது.

இந்த தகவலை கரான்சன்ஸ் போலீஸ் கமாண்டர் ஒலிவெரா தெரிவித்தார். பெர்னாம் புகோ நகரில் ஏற்கனவே 6 பெண்கள் மாயமாகி விட்டனர். அவர்களது கொலையிலும் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட 3 பேரின் மீது கடத்தல், கொலை, பிணத்தை மறைத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

1 comment:

  1. சிறுவர்கள், பெண்கள் முதல் குடும்பத்தவர்கள் அனைவரும் பார்க்கும்
    உங்கள் இணையத் தளத்தில் இருந்து இந்த அருவருப்பான செய்தியை தயவு செய்து நீக்கவும்.

    மிக முக்கியமாக செய்தியில் இணைக்கப்பட்டுள்ள படம் மிகவும் அருவருக்கத் தக்கதாகவும்,
    உணவில் வெறுப்பை உண்டு பண்ணக் கூடியதாகவும் உள்ளது.

    இதைப் பார்த்த சிறுவர்கள் வாந்தி எடுக்கும் நிலையில்....

    ReplyDelete

Powered by Blogger.