இலங்கையில் கதிரியக்க தாக்கத்தை முன்கூட்டியே முன்னெச்சரிக்க நடவடிக்கை
கதிரியக்க தாக்கங்களை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்கான முன்னெச்சரிக்கை கட்டமைப்பொன்றை ஸ்தாபிக்க அணுசக்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.இதற்காக சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்ளவுள்ளதாக அதிகார சபையின் தலைவர் கலாநிதி ரஞ்சித் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
விசேடமாக இந்திய - கூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்தில் விபத்துக்கள் ஏற்படும் பட்சத்தில் அதன்மூலம் நாட்டிற்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்து கொள்வதற்கென இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கதிரியக்கத் தாக்கங்களை அறிந்து கொள்ளக்கூடிய ஐந்து முன்னெச்சரிக்கை கட்டமைப்புக்களை சர்வதேச அணுசக்தி நிறுவனம் இலங்கைக்கு வழங்குவதாகவும் அவர் கூறினார்.
இந்த கட்டமைப்புக்கள் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையான மேற்கு பகுதியிலுள்ள கடற்படை முகாம்களில் ஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும் இது கொழும்பிலிருந்தே செயற்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கதிரியக்க தாக்கங்களிலிருந்து எவ்வாறு தம்மை பாதுகாத்துக் கொள்வது என்பது தொடர்பாக பாதுகாப்பு தரப்பினர் மற்றும் பொதுமக்களை தெளிவுபடுத்தும் செயற்றிட்டமொன்றும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அதிகார சபையின் தலைவர் தெரிவிக்கிறார்.

Post a Comment