வீட்டுக்கு திரும்பும் பௌத்த துறவிகள்
இல்லறத்திற்கு மாறும் பௌத்த துறவிகளின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மைய ஆண்டுகளில் அதிகளவான பௌத்த துறவிகள், தமது துறவற வாழ்க்கையை கைவிட்டு மீண்டும் லௌகீக வாழக்கைக்குத் திரும்பியுள்ளனர்.
2007ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் சுமார் 2500 பௌத்த பிக்குகள் துறவற வாழ்க்கையை துறந்துள்ளனர்.
குடும்பப் பிரச்சினை, விஹாரைகளில் ஏற்படும் நெருக்கடிகள், சக பௌத்த பிக்குகளுடனான முரண்பாடு, குடும்பப் பொறுப்பு, பொருளாதார நெருக்கடி, வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பெற்றுக் கொள்ளுதல் போன்ற பல்வேறு காரணிகளினால் இவ்வாறு பௌத்த பிக்குகள் துறவற வாழ்க்கையை கைவிடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment