ஜெனீவாவில் றிஸ்வி முப்தியும், அகார் முஹம்மதும் புலிகளின் கொடுமைகளை எடுத்துரைத்தனர்
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேணையை தோற்கடிக்கும் வகையில் றிஸ்வி முப்தியும், அகார் முஹம்மதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கை முஸ்லிம்களுக்கு விடுதலைப் புலிகள் இழைத்த கொரூரங்கள் பற்றி றிஸ்வி முப்தியும், அகார் முஹம்மதும் சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகளுக்கு எடுத்துக்கூறினர். முஸ்லிம்கள் மீது கட்டவிழத்துவிடப்பட்ட கொடுமைகளைப் பற்றி மனித உரிமை ஆர்வலகள் மனித உரிமை மீறலாக பார்க்காத துரதிஷ்டத்தையும் எடுத்துக்கூறினார்கள்.
21 வருடங்களுக்கு முன் உடுத்திருந்த உடையுடன் விரட்டப்பட்டு, விரக்தியின் விளிம்பில் நின்றுகொண்டு இன்றுவரை இடம்பெயர்ந்தவர்கள் என்ற முத்திரையுடன் வாழுகின்ற எமது முஸ்லிம் சகோதரர்களின் இழிநிலையை அவர்கள் இருவரும் ஜெனீவாவில் எடுத்துரைத்தனர்.
தாய்நாட்டை நேசிப்பது முஸ்லிம்களின் கடமையாகும். அந்தவகையில் மார்க்க உயர் பீடமென்ற வகையில் றிஸ்வி முப்தியும், அகார் முஹம்மதும் அந்தக் கடமையைச் செய்தார்கள். இதற்காக அவர்களுக்கு நன்றி கூறுகிறோம் என்றார்.

Post a Comment