அதிகாரப் பகிர்வு அவசியமா..? நியாயமான ஆதாரங்களை கோரும் ஹெல உறுமய
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பயப்படுவது ஏன்? அவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை அல்ல என்பதை ஜாதிக ஹெல உறுமய உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துவிடும் என்ற அச்சத்தின் காரணமாகவே கூட்டமைப்பு தயங்குகின்றது என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
தமது தரப்புக் கோரிக்கைகள் நியாயமானவை என்பதைப் பொதுக்களமான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் உரிய நியாயங்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிரூபித்தால் எந்த வகையான அதிகாரப் பகிர்வுக்கும் தடையாக இருக்க மாட்டோம் என்றும் அந்தக்கட்சி தமிழ்க் கூட்டமைப்புக்குச் சவால் விடுத்துள்ளது.
நாடாளுமன்றத் தெரிவுக்குழு விவகாரம் தொடர்பில் தமிழ் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே ஜாதிக ஹெல உறுமயவின் அரசியல் குழு உறுப்பினரும், மேல் மாகாணசபை அமைச்சருமான உதய கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:
தமிழ் மக்களுக்கு நாட்டில் பிரச்சினை இருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் கூறுகின்றது. எனவே, தெரிவுக்குழுவில் அங்கம் வகித்து பிரச்சினைகளைச் சுட்டிக்காட்ட வேண்டியது கூட்டமைப்பின் கடப்பாடாகும். தனிப்பட்ட ரீதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசித் தீர்வை வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது. இறுதியானதொரு தீர்வு தெரிவுக்குழுவினூடாகவே வெளிவரவேண்டும்.
நாம் அதிகாரப்பகிர்வுக்கு எதிர்ப்பை வெளியிடுவது உண்மைதான். இதற்கான காரணங்களை உரியவகையில் விளக்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகள் நியாயமானவை அல்ல என்பதை ஹெல உறுமய நிரூபித்துவிடும் என்ற அச்சத்தின் காரணமாகவே தெரிவுக்குழுவுக்கு வராமல் கூட்டமைப்பு பதுங்குகின்றது.
தமிழ் மக்களுக்குப் பிரச்சினைகள் இருக்கின்றன எனக் கூறும் கூட்டமைப்பு அவற்றைத் தீர்த்து வைப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும். பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண முடியாவிட்டால் அதற்கான பொறுப்பைக் கூட்டமைப்பே ஏற்கவேண்டும் என்றார்.

Post a Comment