மைதானத்தில் மரணமடைந்த உதைப்பந்தாட்ட வீரர் - இத்தாலியில் சம்பவம்
இத்தாலிய உதைபந்தாட்ட வீரரொருவர் மாரடைப்பு காரணமாக போட்டியின் நடுவே மைதானத்தில் மரணமடைந்துள்ளார். லிவோனோ கழகத்தைச் சேர்ந்த பியமரியோ மொரோசினி என்ற வீரரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
பெஸ்கரா அணிக்கெதிராக சனிக்கிழமை இடம்பெற்ற இந்தப் போட்டியில் ஆடிக்கொண்டிருந்த மொரோசினி திடீரென இதயக் கோளாறு காரணமாக நிற்க முடியாமல் கீழே விழ முயன்றார். எனினும் தானாக எழுந்து நிற்க சில தடவைகள் முயற்சித்த போதிலும் இயலாமல் நிலத்தில் வீழ்ந்து மரணமடைந்துவிட்டார்.
இவரது மரணம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த வைத்தியரொருவர் அம்புலன்ஸ் உடனடியாக மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்த போதிலும் அவர் அம்புலன்ஸுக்குள் ஏற்றப்படும் போது மரணமடைந்திருந்தார் எனத் தெரிவித்தார். அவருக்கு நினைவு திரும்பவில்லையெனவும் அவர் தெரிவித்தார். எனினும் உதவிகிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மறுபுறத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Post a Comment