யாழ் - பொம்மைவெளியில் பட்டப்பகலில் கொள்ளை - திருடர்களில் ஒருவன் பிடிபட்டான்
யாழ்.பொம்மை வெளிப்பகுதியில் நேற்று சனிக்கிழமை காலை 11 மணியளவில், பட்டப்பகலில் வீட்டின் கூரையை பிரித்து திருட்டில் ஈடுபட்ட இருவரை, பொது மக்கள் மடக்கி பிடித்து நையப்புடைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சனிக்கிழமை காலை மேற்குறித்த பகுதியிலுள்ள வீடென்றிற்கு சென்ற திருடர்கள் மூவர், அங்கு தாம் இரும்பு விற்க போவதாக தெரிவித்து பேச்சுக் கொடுத்துள்ளனர். அவர்கள் இன்று போய் நாளை வரச் சொல்லவே அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர். அதன்பின்னர் வீட்டிலிருந்தவர்கள் வெளியே சென்றதும் வீட்டின் கூரையைப் பிரித்துக் கொண்டு உள்ளே சென்றுள்ளனர்.
அங்கிருந்த நகை மற்றும் பணம் என்பவற்றை அவர்கள் திருடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், வீட்டின் பெரியவர் ஒருவர் அங்கே திரும்பி வந்தபோது இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக நடமாடியுள்ளார்.
அவரை பிடித்த போது குறித்த பெரியவரை கத்தியால் வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளார். எனினும், பொது மக்கள் அவரை விரட்டி பிடித்த நையப்புடைத்த போது அவருடன் வந்த ஏனைய இருவர் தப்பிச் சென்ற வேளை, குறித்த இளைஞனை் மூலம் பிறிதொருவரையும் பொது மக்கள் உடனடியாக மடக்கி பிடித்தனர்.
ஒருவர் மாத்திரம் திருடியவற்றுடன் தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருடப்பட்ட பொருட்கள் பெறுமதியானவை என தெரிவிக்கப்படுகின்றது

Post a Comment