கிழக்கு முதலமைச்சர் பதவிக்கு ரவூப் ஹக்கீம் தகுதியானவர் - சேகு இஸ்ஸத்தீன் சொல்கிறார்
T Vஅரச தரப்புக்கும், தமிழ்க் கூட்ட மைப்பிற்குமிடையிலான கிழக்கு மாகாண சபை அதிகாரத்துக்கான போட்டியில் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு கிடைக்கும் தரப்பே மாகாண ஆட்சியை அமைக்கும்’ என்று முன்னாள் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சரும் கலைக்கப்பட்ட வட-கிழக்கு மாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவரும், முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தவிசாளருமான சட்டத்தரணி வேதாந்தி எம். எச். சேகு இஸ்ஸதீன் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபைக்கான அரச தரப்பு முதலமைச்சர் வேட்பாளராக மத்திய மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் போட்டியிட இருப்பதான சேதி குறித்துக் கேட்டபோது அவர் மேலும் கூறியதாவது,
வடக்கு, கிழக்கு மாகாண முல்லிம்களின் பெரும்பான்மையான முஸ்லிம்களின் கட்சியாகிய முஸ்லிம் காங்கிரஸின் தலை வராக கடந்த பதினொரு ஆண்டுகளுக்கும் மேலாகப் பதவி வகித்துவரும் ஒரு தகுதியே அதற்கு மேலதிகமானதாகும்.
அம்பாறை மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு பெரும்பான்மை வாக்குகளால் அமோக வெற்றியீட்டிப் பாராளுமன்ற உறுப்பினரானதும் சென்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எதிர்க் கட்சிகளின் முதன்மை வேட்பாளராய் போட்டியிட்டு திருகோணமலை மாவட்டத்தில் வெற்றியீட்டியதும் வரலாறு ஆகும். ஆனால் அப்போதுகளில் அவ்வாறு அவர் போட்டியிட்டதில் யாரும் காழ்ப்புணர்ச்சி கொண்டு கரித்துக் கொட்டவில்லை.
அண்மையில் இலங்கைக்கெதிரான ஜெனீவாப் பிரேரணை விடயத்தில் நமது தாய் நாட்டுக்கு தலைகுனிவு ஏற்படுவதைத் தடுக்க வேண்டிய கடமைப்பாட்டில் அரபு, முஸ்லிம் அங்கத்துவ நாடுகளின் ஆதரவை இலங்கைக்கு சார்பாகத் திரட்டுவதில் முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்ட முயற்சிகள் இந்த நாட்டின் வரலாற்று ஏட்டில் முஸ்லிம்களின் தேசியப் பற்றை மீண்டும் ஒருமுறை பதித்துக்கொள்ள வைத்ததற்கு மு. கா. தலைவர் ரவூப் ஹக்கீம் முக்கிய காரணமாகும்.
இவைகளால் கிழக்கில் மட்டுமல்ல இலங்கையில் எந்த மாகாண சபைத் தேர்தலுக்கும் அரச தரப்பின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டிக்கு நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கமே தயாராக இருக்கும் போது தான் தலைமையேற்றுப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம்கள் நிறைந்த கிழக்கில் அவர் போட்டியிடுவதை அவர் அப்போட்டியில் ஈடுபட விரும்புகிறாரா? இல்லையா? என்றும் தெரியாத நிலையில் விமர்சனங்கள் எழுந்திருப்பது ஆரோக்கியமான அரசியலாகத் தெரியவில்லை.
இவை ஒரு புறமிருக்க அரசாங்க தரப்பில் இருந்தாலும் சரி, தமிழர் கூட்டமைப்புத் தரப்பாக இருந்தாலும் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து போட்டியிடச் சம்மதமானால் குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு முதலமைச்சர் பதவியை வழங்க எந்தத் தரப்பும் தயார் தான்.
அதிலும் குறிப்பாக தேர்தலுக்கு முன்பே மு. கா. தலைவர்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று பறையடித்துப் பகிரங்கப்படுத்தி போட்டியில் இறங்க தமிழர் கூட்டமைப்பு தயாராகவே இருக்கிறது. அந்தளவு கெளரவத்தை முஸ்லிம் காங்கிரஸ¤க்குத் தருவதற்கு அரசாங்கம் தயாரில்லாமல் இருப்பது முஸ்லிம் காங்கிரஸின் முடிவுகளைத் தாமதப் படுத்தக்கூடும்
Post a Comment