Header Ads



இணையத்தள (இன்டர்நெட்) தேடல் பாதாளத்தை நோக்கி..! - அதிர்ச்சித் தகவல்

உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் இணையதள தேடலில்  3ல் ஒன்று, ஆபாச இணைய தள தேடல் என்ற அதிர்ச்சி தகவலை ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.  எக்ஸ்ட்ரீம்டெக் என்ற இணைய தளம் ஆய்வு நடத்தி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது,

 இன்டர்நெட் டிராபிக் எனப்படும் இணைய தள பயன்பாட்டில் சுமார் 30 சதவீத தேடல்கள், ஆபாச இணைய தளங்களை கொண்டுள்ளன. உலகின் மிகப் பெரிய ஆபாச இணைய தளத்தின் 400 கோடி பக்கங்கள் பார்க்கப்பட்டுள்ளன. மாதத்துக்கு 35 கோடி புதிய பார்வையாளர்கள் அதை காண்கின்றனர்.

ஆபாச இணைய தளங்களில் அதிக பார்வையாளர்கள், பக்கங்கள் கொண்டவை அடிப்படையில் முதலிடம் பெறும் இணைய தளத்தை ஒவ்வொருவரும் பார்க்க சராசரியாக 15 நிமிடம் செலவிட்டுள்ளனர். ஆபாச இணைய தளத்தின் எவ்வளவு தகவல்கள் இடம்மாறின என்பது குறித்து அதன் சர்வரில் இருந்து பெறப்பட்ட தகவல்படி பார்த்தால், விநாடிக்கு 50 ஜிகாபைட் அல்லது மாதத்துக்கு 29 பீட்டாபைட் அளவு ஆபாச படங்கள், தகவல்கள் இடம்மாற்றப்பட்டுள்ளன என்று ஆய்வு தெரிவிக்கிறது.

ஒட்டுமொத்த உலகை ஒரே விநாடியில் கையில் கொண்டு நிறுத்தும் சக்தி படைத்த இன்டர்நெட் வசதியில் 3ல் ஒரு பங்கு ஆபாச இணைய தளங்களை பார்க்க பயன்படுத்தப்படும் அதிர்ச்சி தகவலும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

No comments

Powered by Blogger.