Header Ads



மஹ்மூத் அப்பாஸ் இலங்கை வந்தார் - இன்று ஜனாதிபதி மாளிகையில் செங்கம்பள வரவேற்பு

பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் இரு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை இரவு இலங்கைக்கு வருகை தந்துள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக இலங்கையை வந்தடைந்த ஜனாதிபதி அப்பாஸக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் அடங்கலான வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் பலஸ்தீன தூதுக் குழுவினரை வரவேற்று அழைத்து வந்தனர்.

பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸிற்கு ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை செங்கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. அவருக்கு அணி வகுப்பு மரியாதையும் வழங்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து இருநாட்டு ஜனாதிபதிகளும் சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேச உள்ளனர்.

No comments

Powered by Blogger.