இந்திய தூதுக் குழுவினரை யாழ்ப்பாண முஸ்லிம் பிரதிநிதிகள் சந்திக்கிறார்கள்..!
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள லோக்சபா எதிர்க்கட்சி தலைவியான சுஸ்மா ஸ்வராஜ் தலைமையிலான இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழுவினரை யாழ்/கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனப் பிரதிநிதிகள் நாளை புதன்கிழமை சந்திக்கவுள்ளனர்.
யாழ்ப்பாணத்திற்கு நாளை புதன்கிழமை விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய தூதுக் குழுவினரை சந்திப்பதற்கான அழைப்பு யாழ்/கிளிநொச்சி முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு கிடைத்திருந்தது. அதற்கமைவாக இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.
யாழ்/கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத் தலைவர் நிலாம் மற்றும் தகவல் வழிகாட்டல் மத்திய நிலைய பணிப்பாளர் அஸ்மின் (நளீமி) ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளதாக யாழ் முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகிறது.
இந்திய தூதுக்குழுவுடனான இச்சந்திப்பின்போது யாழ்/கிளிநொச்சி முஸ்லிம்களின் பலாத்கார வெளியேற்றம், அவர்களின் தற்போதைய நிலை, இந்திய வீடமைப்பு திட்டத்தில் முஸ்லிம்களுக்கு உரிய பங்கினை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்களை நமது யாழ்/கிளிநொச்சி முஸ்லிம் பிரதிநிதிகள் இந்தியத் தரப்பினருக்கு அறியப்படுத்துவரெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment