Header Ads



எனக்கெதிரான அறிக்கைகள் பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை - ரவூப் ஹக்கீம்

தமிழ், முஸ்லிம் சமூகங்களின் அதிகூடிய ஆதரவினைப் பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தலைமைத்துவ மட்டத்தில் ஒருவரையொருவர் விமர்சிப்பதை இயன்றவரை தவிர்த்துக் கொள்வது  இரு கட்சிகளுக்கும் இடையிலுள்ள உறவினை பேணிக்கொள்வதற்கும் நாம் பிரதி நிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் சமூகங்களின் எதிர்கால கூட்டு முயற்சிகளுக்கு இன்றியமையாததாகும் என நீதியமைச்சரும், முஸ்லீம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் ரவூப் ஹக்கீம் தொடர்பில் வெளியிட்டு வரும் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் போதே ஹக்கீம் இதனை தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் போராட்டம் இராணுவ ரீதியாக முடக்கப்பட்ட பின்புலத்தில் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் எப்போதுமே பழியை யார் தலையிலாவது சுமத்தும் நோக்கில் செயற்பாடுகின்றார்கள். இந்த நெடிக்கடியான காலகட்டத்திலாவது சுய விமர்சனப் பார்வையோடு புலிகள் செய்த மகா பெரிய வரலாற்றுத் தவறுகள் இன்றைய கள நிலைவரங்களில் விமர்சனத்துக்குரியது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இதைத்தான் நான் பல உதாரணங்ளோடு எனது மருதனை பேச்சிலே சுட்டிக் காட்டியிருந்தேன். இதில் ஓரு சில இடங்களில் நான் சொன்ன கருத்துக்கள் தமிழ் தேசிய பரப்பில் என் சம்பந்தமான மனப்பாங்கில் பாதிப்புக்களை ஏற்படுத்தியிருப்பது குறித்து வருந்துகிறேன்.

எனது மருதானை உரையை பத்திரிகைகள் முழுமையாகப் பிரசுக்கவில்லை. பிரசுக்கப்பட்டிருந்தால் என் கருத்துக்களை விமர்சித்தவர்கள் அதன் உண்மைத் தன்மையை விளங்கியிருப்பார்கள். அவர்கள் மறுக்க முடியாத அளவுக்கு யதார்த்தமாக விடயங்களை எனது உரையில் தெரிவித்திருந்தேன்.

உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நம்மில் ஒரு சிலர் சில கருத்துக்களை பேசிவிடுகிறோம் என்பதற்காக எம் இரு கட்சிகளும் முரணான திசையில் பயணிக்கற்படுகின்றது என அர்த்தம் கொள்ளத் தேவையில்லை. யுத்தத்துக்கு பின்னரான சூழ்நிலையில் சிறுபான்மையினரான நாம் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றோம்.

அவற்றுக்கான தீர்வுகளைக் காணும் முயற்சியில் எமக்கிடையே அணுகுறைகளில் வித்தியாசமிருக்கின்றதேயொழிய இலக்குகளில் பாரிய வித்தியாசம் கிடையாது. என்னால் செய்யப்படுகின்ற விமர்சனங்கள் அல்லது எனக்கெதிராக விடுக்கப்படும் அறிக்கைகள் பற்றி அதிகமாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை அதற்கான அவசியமில்லை என அமைச்சர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. கேள்வி கேட்பதே.... ஒரு மண்டையான் புனந்தின்னி ............ புனம் தின்னியின் கேள்விக்கு ........... பாசிச புனம் தின்னி பிரபாகரன் வந்துதான் பதில் சொல்ல வேண்டும்....

    ReplyDelete

Powered by Blogger.