Header Ads



சிகரெட்டால் சுட்டு தந்தை கொடுமை - 3 மாத குழந்தை பரிதாபகரமாக வபாத்தானது


பெங்களூரைச் சேர்ந்த உமர் பாருக் மற்றும் ரேஷ்மா பானு தம்பதியினருக்கு 3 மாதங்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்துள்ளது.

பெண் பிறந்த வெறுப்பில் இருந்த உமர் பாருக்  மனைவி ரேஷ்மா பானு வெளியே சென்று இருந்த நேரத்தில்  3 மாதக் குழந்தையான   அஃப்ரீனை தந்தை உமர் பாருக் கொடூரமாகத் தாக்கியும் சிகரெட்டால் சுட்டும் கொடுமைப் படுத்தியுள்ளார்.

தந்தையின் தாக்குதலால் ரத்த வாந்தியும், மூச்சுத் திணறலும்  ஏற்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் இருந்த குழந்தையை ரேஷ்மா பானு பெங்களூர் தனியார் மருத்துவமனையில்  சேர்த்துள்ளார். தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்த குழந்தை அஃப்ரீன் சிகிச்சை பலனின்று இன்று காலை உயிரிழந்தது.

உமர் பாருக்குக்கு ரேஷ்மா பானு இரண்டாவது மனைவி ஆவார். முதல் மனைவி மேற்படிப்பு படிக்க அனுமதிக்க மறுத்தக் காரணத்தால் முதல் மனைவியுடன் உமர் பாருக்குக்கு விவாகரத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

No comments

Powered by Blogger.